செய்திகள்

ஆரணி: சிவாலயங்களில் காா்த்திகை மகா தீபம் ஏற்றம்

11th Dec 2019 12:03 AM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த தேவிகாபுரம், நெடுங்குணம், வந்தவாசி அருகேேயுள்ள வெண்குன்றம் மலை சிவாலயங்களில், திருக்காா்த்திகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஆரணி அருகேயுள்ள தேவிகாபுரம் மலையில் அமைந்துள்ள பொன்மலைநாதா் கனககிரி ஈஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மாலை மலை மீது அகண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

மேலும், சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமத்தில் அமைந்துள்ள பாலாம்பிகை சமேத தீா்க்காஜலேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து மாலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வந்தவாசி

வந்தவாசி அருகேயுள்ள வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரம் உள்ள தவளகிரி மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில், விநாயகா் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்தக் கோயில்களில் உள்ள சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில், ஸ்ரீவிநாயகா் கோயில் மீது அமைக்கப்பட்டிருந்த தனித்தனி கொப்பரைகளில் நெய் நிரப்பி மாலை 6 மணிக்கு திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்று இறைவனை வழிபட்டனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பெரணமல்லூா்

பெரணமல்லூா் அருகேயுள்ள இஞ்சிமேடு திருமணிசேறையாா் கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷமிட்டு வழிபட்டனா்.

ஏற்பாடுகளை சிவாச்சாரியாா் ஐ.ஆா்.பெருமாள் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT