செய்திகள்

மதம் மாறியவர்கள் திருப்பதி தேவஸ்தான பணியில் தொடர அனுமதிக்க இயலாது

28th Aug 2019 02:35 AM

ADVERTISEMENT


இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் ஊழியர்களாக தொடர அனுமதிக்க இயலாது என ஆந்திர மாநில தலைமைச் செயலர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.   

ஆந்திர மாநில தலைமைச் செயலர், எல்.வி.சுப்பிரமணியன் திருப்பதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது:

இந்து மதத்தில் இருந்து வேறு மதங்களுக்கு மாறுவது, மதம் மாறியவர்களின் தனிப்பட்ட விருப்பம்.  ஆனால், தற்போது மதம் மாறியவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட ஆந்திர இந்து அறநிலையத் துறையில் பணியில் இருக்கும் நிலையில், தொடர்ந்து இந்து சம்பிரதாயங்களை அவர்கள் கடைபிடிக்கின்றனரா எனக் கண்டறிய, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தலைமையில், ஒரு தனி குழு விரைவில் அமைக்கப்படும்.  அந்த குழு, இந்து அறநிலையத் துறை மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியில் இருக்கும் மதம் மாறியவர்கள் தொடர்ந்து, இந்து சம்பிரதாய முறைப்படி, அவர்கள் வீட்டு திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளை நடத்துகிறார்களா என்பது  கண்காணிக்கப்படும்.

மற்ற மதங்களைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களுடைய மதங்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும். ஆனால், மதம் மாறிச் சென்றவர்கள் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றில் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. 

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை  வேண்டும். ஆனால் ஏழுமலையான் மீது நம்பிக்கை  இல்லை, இந்து மத சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை இல்லை என்கிற ரீதியில் செயல்படுபவர்களை காலம் மாறி வரும் தற்போதைய நிலையில்  மன்னிக்க முடியாது என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT