மும்பையைச் சேர்ந்த ஆப்கன்ஸ் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பரமசிவம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு, ரூ. 22 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸை நன்கொடையாக வழங்கினார்.
திங்கள்கிழமை ஏழுமலையான் கோயில் எதிரில் ஆம்புலன்ஸுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அதன் சாவியை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.