இடைத்தரகர்கள் ஒழிப்பில் தேவஸ்தானம் தீவிரம்

திருமலையில் இடைத்தரகர்களை ஒழிக்கும் பணியில் தேவஸ்தானம் ஈடுபட்டு வருகிறது.

திருமலையில் இடைத்தரகர்களை ஒழிக்கும் பணியில் தேவஸ்தானம் ஈடுபட்டு வருகிறது.
 திருமலையில் வாடகை அறை பெறுதல், தரிசன டிக்கெட் ஏற்பாடு செய்தல், லட்டு விற்பனை உள்ளிட்டவற்றில் இடைத்தரகர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவர்கள் பக்தர்களிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு, தரிசன டிக்கெட் விற்று வருகின்றனர். 
இதை ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பாகமாக, ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களின் மக்கள் தொடர்பு அதிகாரிகளை விசாரிக்கும் பணியில் தேவஸ்தானம் தீவிரம் காட்டி வருகிறது. 
 அமைச்சர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் திருமலைக்கு வரும் போது, தங்கும் அறை, தரிசன டிக்கெட் ஏற்பாடு, லட்டு பிரசாதம் வாங்குதல் உள்ளிட்டவற்றை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். 
ஆனால், அவர்கள் அமைச்சர்களின் பரிந்துரைக் கடிதங்களை வைத்துக் கொண்டு, இடைத்தரகர்களாக செயல்பட்டு, அதிக விலைக்கு தரிசன டிக்கெட்டுகளை விற்று வருவதாக தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்துள்ளன. அதனால் திருமலையில் அமைச்சர்களின் மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ) செயலாற்றி வரும் அனைவரிடமும் விசாரணை நடத்த தேவஸ்தான கண்காணிப்புத் துறைக்கு தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி உத்தரவிட்டார். 
விசாரணையில், 15 மக்கள் தொடர்பு அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருவதாக கண்காணிப்புத் துறை கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகார் அளிக்க...
தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com