தேவஸ்தான வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்களை தேவஸ்தானம் கண்டறிந்துள்ளது.


திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்களை தேவஸ்தானம் கண்டறிந்துள்ளது.
திருமலை அமைந்துள்ள ஏழுமலையில் 82 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் சேஷாசல வனப்பகுதி உள்ளது. இதில் தேவஸ்தான பிரிவிற்கு உட்பட்டு 2700 ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மிகவும் அரிதான உயிரினங்கள் வளர்ந்து வருகின்றன. புனுகு பூனை,  தங்க பல்லி உள்ளிட்டவை அரிய வகை உயிரினங்களில் பிரசித்தி பெற்றவை. வனப்பகுதியில் தேவஸ்தானம் சந்தன மரம், செம்மரம்,  நட்சத்திர மரங்கள் என பலவற்றை தேவஸ்தானம் வளர்த்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அரிதான உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் அவற்றைக் கண்டறிய தேவஸ்தானம் வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளது. பக்தர்களுக்கு எச்சரிக்கைப் பலகைகளை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. இந்த உயிரினங்களைப் பாதுகாக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com