திருமலையில் உடைமைகள் மையத்தை அதிகரிக்க நடவடிக்கை

திருமலையில் பக்தர்களின் உடைமைகளை வைக்க மையங்களை அதிகரிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.


திருமலையில் பக்தர்களின் உடைமைகளை வைக்க மையங்களை அதிகரிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலையில் வரும் செப்.30-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. அது குறித்த தேவஸ்தான அதிகாரிகளுடனான கலந்துரையாடல் குழு கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. அதற்கு பின் அவர் கூறியதாவது:
பிரம்மோற்சவத்தின் போது திருமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவர். பிரம்மோற்சவ வாகன சேவையின் போது பல மாநிலங்களிலிருந்தும் கலைக் குழுக்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தும். அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலையில் அதிக அளவில் உடைமைகள் சேகரிக்கும் மையத்தை ஏற்படுத்த உள்ளது. அலிபிரி,  ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உடைமைகள் மையங்களை காட்டிலும் கூடுதலாக ஏற்படுத்த அவர் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com