செய்திகள்

திருமலை, திருப்பதியில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

16th Aug 2019 02:36 AM

ADVERTISEMENT


திருமலையில் உள்ள கோகுலம் விருந்தினர் மாளிகையில் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வியாழக்கிழமை காலை தேவஸ்தான சிறப்பு அதிகாரி தேசியக் கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அணிவகுப்பையும் பார்வையிட்டார். 
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தேசியக் கொடியை ஏற்றி, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் நடத்திய அணிவகுப்பை பார்வையிட்டார். பின் தங்கள் பணிகாலங்களில் சிறப்பாக பணியாற்றிய தேவஸ்தான அதிகாரிகள் 39 பேருக்கும், ஊழியர்கள் 187 பேருக்கும் 5 கிராம் வெள்ளிப் பதக்கம் வழங்கினார். அதேபோல் தேவஸ்தான பள்ளிகளில் சிறப்பாக பயின்ற மாணக்கர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 
பின்னர், மோப்ப நாய் படை, குதிரை படை உள்ளிட்டவை பங்கேற்ற சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிகளில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT