செய்திகள்

குரு ஸ்ரீ ராகவேந்திரா ஆராதனை ஜோதிட சிறப்புத் தொகுப்பு

16th Aug 2019 03:32 PM | - ஜோதிட சிரோன்மணி தேவி

ADVERTISEMENT

 

பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய

சத்ய தர்ம ரதாயச

பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்

ADVERTISEMENT

ஸ்ரீ காம தேநுவே

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பற்றித் தெரியாதோர் இவ்வுலகில் யாராவது உள்ளாரா.. இல்லை என்றே கூறவேண்டும். இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு குரு ஒளி காட்டும் ஒரு தெய்வீக மகா சக்தி. இந்த மாதம் ராகவேந்திர சுவாமிகளின் 348வது ஆராதனை நாள் என்பதால் நாம் முதலில் அவரை பற்றி சிறு தொகுப்பு பார்ப்போம் பின்பு அவர் ஜாதகத்தின் கொஞ்சம் ஆராய்வோம்.  

இவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகா தெய்வம், வைணவ நெறியில் துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் பெற்றோர்களான திரு திம்மண்ண பட்டர், திருமதி கோபிகாம்பாள் தம்பதியர்கள் திருப்பதி ஏழுமலையானை நினைத்து வேண்டிப் பிறந்த மூன்றாவது குழந்தை என்பதால் இவருக்கு வேங்கட நாதன் என்று பெயரிட்டனர்.   அவரது தந்தையின் மறைவிற்குப் பிறகு அவர் தன் அடிப்படைக் கல்வியை அவர் மைத்துனர் பயிர்ப்பித்தார். பின்பு வீணை வித்வனான தாத்தாவிடம் வீணை கற்றுக்கொண்டார். அதனால் இவருக்கும் வேத சாஸ்திரங்கள், வீணை மற்றும் ஆன்மீகம் மீது ஆர்வம் உண்டு. வேங்கட நாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். புவனகிரியில் பிறந்தது பின்பு மதுரையில் வளர்ந்து, கும்பகோணத்தில் குடியேறினார். இவருக்கு சரஸ்வதி என்பவளை மணந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. வேங்கட நாதர், தஞ்சாவூரில் 1621-ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகப் பொறுப்பேற்றார். 

சிறுவயதிலிருந்து வேங்கட நாதருக்கு வலிமை வாய்ந்த அக்னி சூக்தம், வருண மந்திரம், சமஸ்கிருத வேத ஸ்லோகங்கள் மற்றும் நிறைய ஸ்தோத்திரம் கற்றுக்கொண்டவர். அவற்றினை எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டு இருப்பார். சிலர் இன்றும் ஜீவசமாதியில் அந்த ஸ்லோக அதிர்வலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் சமஸ்கிருதம், இலக்கியம் மற்றும் துவைத வேதாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் தான் கற்பித்த அனைத்தையும் இலவசமாகக் குழந்தைகளுக்கு மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார். பல்வேறு அறிஞர்களிடம் சொற்பொழிவு, விவாதங்களில் ஈடுபட்டார். இவர் குடும்பத்தாருடன் உணவு இல்லாமல் வறுமையில் இருந்தாலும் கடவுளை ஒருநாளும் குறை சொல்லமாட்டார்.

சிதம்பரம் நகரிலிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புவனகிரி என்ற சுவேத நதி கரையில், குரு ராகவேந்தர் கி.பி 1595-ம் வருடம் பால்குண ஆண்டு சுக்லபட்ச சப்தமி திதியில், தனுர் லக்கினத்தில் ரிஷப ராசியில், வியாழக்கிழமையன்று, மிருகசிரீட  நட்சரத்தில் அவதரித்தார். இந்த கீழ் குறிப்பிட்ட ராகவேந்தரின் ஜாதகம்  சுமாரான பாகை முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகத்தை ஆராயும்பொழுது தனுர் லக்கினத்தில் குருவின் ஆதிக்கத்துடன் ஞான காரகனுடன் சேர்ந்து, இரட்டிப்பு ஆக்கும் ராகுவின் பார்வையிலிருந்து, அவர் ஞானதின் உச்சியில் ஒருமிக்கவராகக் கடவுளின் அருளோடு மற்றவருக்கும் தன் ஞானத்தினை கொடுப்பவராகத் திகழ்கிறார். ஒளிகிரகமான சந்திரன் மூலதிரிகோணம் பெற்று விளங்குகிறது. 9, 10 கூறியவர் ஒன்றாக மோட்ச ஸ்தானத்தில் இருந்து தர்மகர்மாதிபதி யோகத்தைப் பெறுகிறார். தனுசு லக்னத்துக்கு நண்பர்களான சூரியனும், புதனும் தர்மகர்மாதிபதிகளாக அமைவார்கள். 
 

சனி லக்னத்துக்கு எட்டில் இருந்தால் ஆயுள் பலம் கூடும் என்று கூறலாம். அதனால்தான் அவர் உயிரோடு ஜீவா சமாதி அடைந்தும் இன்றும் உயிருடன் நமக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஜாதகத்தையும், ஆயுள் காரகன் சனியை பார்த்தவுடன் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சமயம் ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு 3   ஜோதிடர்கள் வந்திருந்தனர். ஸ்வாமியும் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அவரின் ஜாதகத்தை கொடுத்து ஆயுள் காலத்தைக் குறித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார் .  

ஜோதிடம் பார்ப்பவர்கள் ஆயுளைப் பற்றிச் சொல்லக்கூடாது என்றாலும் ஸ்வாமிகள் கேட்டதால் மூவரும் தனித்தனியே கணித்து கூறினார். ஒரு ஜோதிடர் சுவாமிகளுடைய ஆயுள் 70  ஆண்டுகள் எனவும், இரண்டாவது ஜோதிடர் 300 ஆண்டுகள் எனவும், மூன்றாவது ஜோதிடர் 700 ஆண்டுகள் எனவும் சொன்னார்கள். என்னடா இது கணிப்பது என்பது ஒன்றாகத்தானே வரவேண்டும் ஏன் தவறாக வருடங்களை கூறுகிறீர்கள் என்று அங்கிருக்கும் மக்கள் வினவினார்கள். அதற்கும் ராகவேந்திரா ஸ்வாமி  அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, மூவரும் சரியாகக் கணித்திருக்கிறார்கள். அதாவது, தன்னுடைய உடல் இந்த மண்ணில் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்றும், ஜீவசமாதி அடைந்து முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனத்தில் இருக்கப் போவதாகவும், தன்னை மனதார நேசிக்கும் மக்களோடு தான் எழுநூறு ஆண்டுகள் இருக்கப் போவதாகவும், முடிவாக பிரம்ம லோகம் சென்று சங்குகர்ணனாக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார். 

தன்னை அண்டியவர்களுக்கு சகலமும் தந்தருளும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி, கலியுகத்தில் 400 வருடங்களுக்கும் மேலாக ஜீவசமாதியில் இருந்து ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பூலோக புண்ணிய சொர்க்கமான மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் - ஜீவ சமாதி நிலையை இருந்து அருள் செய்கிறார்.

இவரை விஷ்ணுவின், பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். குடும்பம் வறுமையில் இருந்தாலும் நாட்டுமக்களுக்கு மழையை வரவைத்தார், பஞ்சத்தை போக்கியவர், மனைவிக்கு கர்மாவை முடித்து மோட்சத்தினை அளித்தவர், தான் கற்றதை மற்றவருக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக, தகுதிக்குரிய மக்களுக்குச் செய்யப்படும் உதவியாளனாக, நோயாளியைக் குணமாக்கும் மருத்துவராக, பாதயாத்திரை மூலம் ஆன்மீக சிந்தனையை தூண்டியவராக, சரியான வாழ்க்கை கற்றுக்கொடுப்பவனாக, அமைதியின் உருவமாக, கடவுளின் மேல் நல்ல பக்தி கொண்டவராக, குருட்டு நம்பிக்கையாக இல்லாதவராக, மகாசக்தி பெற்றிருந்தாலும் கர்வம் இல்லாமல் மக்களுக்கு உதவும் கோலாக குருவாக இருந்தார் நம் குரு ராகவேந்திரர். இவர் வழியில் பின்பற்றிச் செல்லும் பக்தர்களாக இருந்து, மந்திராலயம் சென்று குருவின் அனுக்கிரகம் பெற்றுக்கொள்வோம்.
  
ஓம் ஸ்ரீ குருராகவேந்திராய நமஹ

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

ADVERTISEMENT
ADVERTISEMENT