திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

திருமலை: பவித்ரோற்சவம் நிறைவு

Published: 14th August 2019 02:06 AM


திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பவித்ரோற்வசம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. 
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. கோயிலில் ஏற்பட்ட தோஷங்களை களைய இந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை அர்ச்சகர்கள் சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளச் செய்தனர். அவர்களுக்கு பால், தயிர், தேன், பழரசம், இளநீர், மஞ்சள், சந்தனம் செஞ்சந்தனம் உள்ளிட்ட திருமஞ்சனப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. 
அதன்பின், அவர்கள் முன் ஹோமம் வளர்த்தி அர்ச்சகர்கள் மகா பூர்ணாஹுதியுடன் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நிறைவு செய்தனர். அதன்பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு, சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்
திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா கொடியேற்றம்
அத்திவரதர் பெருவிழா: அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆய்வு
அத்திவரதர் பெருவிழா: 1979-2019 ஆண்டுகளில் வியப்புக்குரிய ஒற்றுமை
பிரியாவிடை பெற்றார் அத்திவரதப்  பெருமாள்!