நினைத்தது நடக்கவேண்டுமா? இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்!

நினைப்பது என்றால் என்ன? ஒவ்வொருவரின் தேவை பலபல. அவற்றுள் நமக்கே..
நினைத்தது நடக்கவேண்டுமா? இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்!

(நினைப்பது நடக்கவில்லையானால் என்னிடம் கூறுங்கள் ... ) நினைப்பது என்றால் என்ன? ஒவ்வொருவரின் தேவை பலபல. அவற்றுள் நமக்கே தெரியும் எது, எந்த சூழலில்  நமக்குத் தேவை என்று. ஆயினும் நம்முள் பலர் மற்றவர்களிடம் இருக்கிறதே அதே எனக்கும் வேண்டும் என்று தவிக்கின்றனர். இந்நிலை மாறவேண்டும் என்பது எனது  தனிப்பட்ட கருத்து. ஏன் எனில் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டது போல் என்பர். புலிக்கு இயற்கையிலேயே வரி கோடுகள் உண்டு. ஆனால், பூனைக்கு அதுபோல் கிடையாது. அதனை மனதில் கொண்டே அவரவரின் தேவைகள் என்பது மற்றவர்களுக்கு நிச்சயம் தெரியாததே ஆகும். 

அது ஒரு புறம் நிற்க, நமது தேவைகள் கிடைத்தபின்னரும் ஒரு சிலர் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம், எனும் கருத்தோட்டம் மனதை அரித்தெடுக்கும். அதனால்,  தேவைகள் அதிகமாகி நமக்கு நாமே வேலி போட்டுக் கொண்டு தவிப்பதைக் காணமுடிகிறது. அது ஒருபுறம் நிற்க, வேறு சிலருக்கோ அவர்களின் நிச்சய தேவைகள் கூட  கிடைக்கப் பெறாமல் இருப்பது சிறிது மனக்கவலை தான். அப்படிப் பட்ட நிச்சய, அதிமுக்கிய தேவைகளைப் பெற நாம் செய்ய வேண்டியதென்ன, மற்றும் சொல்லவேண்டிய  சுலோகம் என்ன என்பதனை அறியவே இக்கட்டுரை. 

தமிழ் தேவார, திருப்புகழ் மற்றும் பல தமிழ் நூலால் படித்து பயன் பெறப் பலவகை இருப்பினும், தேவ பாஷை எனும் சமஸ்க்ரிதம் உச்சரிப்பால் சில ஏற்ற இறக்க ஒலி  அளவால் நிச்சயம் பலன் கிடைப்பதாக நம் இந்தியாவை விட அதிகமாக சமஸ்க்ரிதத்தை ஆதரிக்கும் ஜெர்மனி போன்ற நாடுகள் , சமஸ்க்ரிதத்தால் விளையும் நன்மைகளை  நன்கு அறிந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 

நியாயமான தேவைகளுக்கு அவற்றை ஒரு முறையாவது பயன் படுத்திப் பாருங்களேன், நிச்சயம் உங்களுக்கே அது தெரியவரும். நான் கூறப்போகும் அந்த மந்திரச்சொல்லை  கூறியவர்கள், தற்கொலை செய்துகொள்வதில் இருந்து காக்கப்பட்டுள்ளனர், மற்றும் அவர்கள் நினைத்த காரியம் கைகூடியுள்ளது. இது சாத்தியமான ஒரு தகவல் ஆகும்.  இதனைக் கூறுபவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதையும், பிரச்சினைகள் தீர்வதையும் காண முடிகிறது.

நமது நியாயமான ஆசைகள், எண்ணங்கள் எல்லாம்  நிறைவேற்றி வைக்கும் அந்த ஸ்தோத்திரம் , இதோ பின்வருமாறு 

சிம்ஹ சார்தூல ரூபஸ்ச வ்யாக்ர சர்மாம் பாரவ்ருதஹ !
கால யோகி மஹா நாதஹ ஸர்வக்காம சதுஷ்பதஹ !!

SIMHA SAARTHOOLA ROOPASCHA  VYAAKRASARMAAM PARAAVRUTHAHA !
KAALA YOGI MAHAA NAATHAHA SARVAKKAAMA SATHUZHPATHAHA !! 

இதனுடன்,

சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே !
சரண்யே திரியம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே !!

SARVA MANGALA MAANGALYE SIVE SARVAARTHA SATHIGE !
CHARANYAE THIRIYAMBIGE GOWRI NAARAAYANEE NAMOSTHUTHAE !!

மேற்கூறிய, இவ்விரண்டையும் தினசரி 10 முறை, காலைக் கடன்களை முடித்ததும் மனநிலையை ஒருநிலைப்படுத்திக் கூறிப் பாருங்கள், உங்களின் நியாயமான  கோரிக்கைகள் நிறைவேறுவது திண்ணம். இவை இரண்டும், சிவ, பார்வதி துதிகளாகும். இவற்றிற்கு நீங்கள் உங்களது மனதைத் தூய்மையாக வைத்துச் சொன்னாலே போதும்,  வேறு ஏதும் தேவை இல்லை. இதனைக் கூறிப் பலன் அடைந்தவர்கள் பலர். தற்போது இதனைப் பயன்படுத்தி பயன் பெறுபவர்கள், தயவு கூர்ந்து, இக்கட்டுரையின் கருத்துப்  பகுதியில், தயவு செய்து பகிரவும். அதுவே மற்றவர்களுக்கு நீங்கள் தரும் நம்பிக்கை ஆகும். 

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com