திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

திருச்சானூரில் வரலட்சுமி விரதம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் வலம்

DIN | Published: 10th August 2019 05:06 AM
வரலட்சுமி விரதத்தையொட்டி, தங்கத் தேரில் மாட வீதியில் வலம் வந்த பத்மாவதி தாயார். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயார்.

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்தையொட்டி, தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் மாடவீதியில் வலம் வந்தார்.

திருச்சானூரில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பத்மாவதி தாயார் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு தாயாரை சுப்ரபாத சேவையில் துயிலெழுப்பி, ஸ்நபன திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றன. அதன்பின் தாயாரை ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, அங்கு கலசம் ஏற்படுத்தி அர்ச்சகர்கள் சகஸ்ர நாமார்ச்சனை, அஷ்டோத்திரம் உள்ளிட்டவற்றைக் கூறி விரதத்தை அனுஷ்டித்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஆஸ்தான மண்டபம் பலவகையான பழங்கள், மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.  மாலை பத்மாவதி தாயார் தங்கத் தேரில் மாடவீதியில் வலம் வந்தார். பெண்கள் அனைவரும் சேர்ந்து தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தங்கதேரில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரைக் காண பக்தர்கள் மாடவீதியில் கூடினர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

தங்கப் புடவை : வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் உள்ள மூலவருக்கு தங்கத்தால் நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டது. இரு நாள்களுக்கு இந்த தங்கப் புடவையில் தாயார் அருள்பாலிக்க உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்
திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா கொடியேற்றம்
அத்திவரதர் பெருவிழா: அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆய்வு
அத்திவரதர் பெருவிழா: 1979-2019 ஆண்டுகளில் வியப்புக்குரிய ஒற்றுமை
பிரியாவிடை பெற்றார் அத்திவரதப்  பெருமாள்!