திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஒருவரின் அங்க லக்ஷணத்தையும், நடவடிக்கையையும் கொண்டு ஜாதக அமைப்பைக் கூற இயலுமா?

By - ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்| Published: 09th August 2019 06:00 PM

 

ஆம், ஒருவரின் அங்க லக்ஷணங்களைக் கொண்டும் / சிலரின் நடவடிக்கைகளைக் கொண்டும் ஒருவரின் ஜாதக அமைப்பை நிச்சயமாகக் கூற இயலும். பின்வரும் கிரக சேர்க்கைகளைக் கொண்டு ஒருவரின் லக்கினத்தை நிர்ணயிக்க முடியும். ஒருவரின் ஜாதக கட்டங்களை ஆய்வு செய்யும் போது , ஜாதகரைப் பற்றிய ஒரு சில விஷயங்கள் உடனடியாக தெரியவரும். அவற்றைப்பற்றி இந்த கட்டுரையில் காணலாம். 

1. மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் கொண்ட கண்களைக் கொண்டவர்கள் என்றால், நெருப்பு ஸ்தானமான மேஷம், சிம்மம், தனுசு ராசிகளில் , சூரியனோ அல்லது செவ்வாயோ அவர்களின் ஜாதகத்தில் இருக்கக்கூடும். மேலும் அது நேத்ர ஸ்தானம் ஆகவும் இருக்கலாம். 

2. கண் விழிகள் சாதாரண அளவைவிடப் பெரிதாக இருந்து, மேலும் அவைகள் முன்னால் துருத்திக்கொண்டு இருக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஒருவரின் ஜாதகத்தில், செவ்வாய் ஏழாம் இடத்தில் இருக்கக்கூடும். 

3. ஒருவரின் கண்கள் ரத்த சிவப்பாகவும், அவரின் உடல் பழுத்த செப்பு போன்றும் , மற்றும் அவருக்கு பிஸ்டுலா போன்று ஏதேனும் ஒரு மூல வியாதியின் அறிகுறி காணப்படின், அவரின் ஜாதகத்தில் செவ்வாய் லக்கின பாவத்தில் இருக்க அதிக வாய்ப்பு  உண்டு. 

4. ஒருவரின் கண்களில் எப்போதும் எரிச்சலால் அவதிப்படுபவராயும், சிறிய கல் போன்ற கண் இமைகளில் துருத்திக்கொண்டு இருந்தால், அவரின் ஜாதகத்தில் செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும்  அறியலாம். 

5. ஒருவரின் உடலில் ஏதேனும் ஒரு பகுதி உடைந்தோ / வெட்டுப்பட்டோ / எரிந்த நிலையிலிருந்தோ காணப் பட்டால், அவரின் ஜாதகத்தில், தனுசு ராசியில் செவ்வாய் இருப்பதைக் காணலாம். 

6. எவர் ஒருவரின் கண்கள் மிகவும் கவர்ச்சியுடனும் , பளபளப்புடனும், கருப்பு நிறத்தில் , கரும் திராட்சையை ஒத்திருந்தால் அவரின் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருக்க வேண்டும். அதே சற்று மாறுபட்டுக் காணப்பட்டால், சந்திரன் இரண்டாம் இடத்தில் இருக்க வாய்ப்பு. என்ன இங்கு முக்கியமானது என்றால் சந்திரன் இரண்டில் இருக்கும் ஜாதகர் கண்கள் அவ்வளவு கவர்ச்சியும், பளபளப்பும் குறைவாகவே இருக்கும். 

7. எவர் ஒருவரின் பற்கள் பளபளக்கும் வெண்மை நிறத்தைக்கொண்டும், அழகான வரிசையில் அமைந்தும்  காணப்படின், அவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் இரண்டாம் இடத்திலோ அல்லது முதல் வீட்டிலோ இருக்க எதிர்பார்க்கலாம். 

8. எவர் ஒருவரின் பேச்சு திக்குமாறு இருந்தும், அல்லது நாக்கில் ஏதேனும் ஒரு குறைபாடு  இருப்பின் அவரின் ஜாதகத்தில், பாதிப்படைந்த ராகு இரண்டாம் இடத்தில் இருக்கும். 

9. எவர் ஒருவர், வாயைத் திறந்து பேசாதபோதும் அவரின் பல் வெளியில் தெரிகிறதென்றால், அவரின் ஜாதகத்தில், சனி ஒன்றாம் இடத்தில் இருப்பதாகும். 

10. எவர் ஒருவர் எழுதுகிறபோது , வலது புறமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு எழுதுகிறாரோ, அவரின் ஜாதகத்தில், ராகு இரண்டாம் இடத்தில் இருப்பதாக கொள்ளவேண்டும். 

11.  எவர் ஒருவர் விரை வீக்க நோயால் பாதிக்கப் படுகிறாரோ அவருக்கு சனி விருச்சிகத்திலிருந்து சனியால் பார்க்க நேரிடும். 

12. எவர் ஒருவருக்கு அடிக்கடி மூக்கில் அல்லது பற்களில் ரத்த கசிவு ஏற்படுகிறதோ, அவரின் லக்கினம் மேஷத்திற்கு 260 பாகையில் இருக்க வாய்ப்பு.

13. எவர் ஒருவருக்கு, முன் நெற்றியில் தழும்பு உள்ளதோ அவரின் ஜாதகத்தில் முதல் வீட்டில் செவ்வாய் இருக்கும் அல்லது செவ்வாய் முதல் வீட்டைப் பார்ப்பதாக இருக்கும். இது அதிகமாக மேஷ லக்கினகாரர்களுக்கு பொருந்தும். 

14. எவர் ஒருவருக்கு, இளைய சகோதரர் / சகோதரி இல்லையோ அவர்களின் ஜாதகத்தில், மூன்றாம் வீட்டில் சனி இருக்க வேண்டும், அதிலும் அந்த இடம், மேஷம், சிம்மம், தனுசு அல்லது விருச்சிகமாக இருக்கலாம். 

15.  எவர் ஒருவரின் சகோதரர்களிடையே அன்பு , பாசம் இவை இல்லையோ, எந்த உதவியும் பெற இயலவில்லையோ, அவரின் ஜாதகத்தில், முக்கிய காரணமாக இருப்பது , மூன்றாம் வீட்டில் இருக்கும் செவ்வாயே ஆகும். 

16. எவர் ஒருவருக்கு, காது சற்று கேட்கும் திறன் குறைபாடு உள்ளதோ அல்லது பாதி செவிடாக இருப்பாரே ஆயின், அவரின் ஜாதகத்தில், 3 , 9 , 11 ஆம் இடமாக மிதுனம், துலாம் அல்லது கும்பம் வருமாயின் இது உண்மையாகும். 

17. ஒருவரின் மனைவி மிகவும் அழகாக மற்றும் கவர்ச்சி பொருந்தியவராக இருந்தால், அந்த ஜாதகரின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் , குரு அல்லது சுக்கிரன் நிச்சயம் இருக்கும். 

18. ஒருவருக்கு அழகான குழந்தைகள் பிறந்தால் அவரின் ஜாதகத்தில் 5 மற்றும் 11 ஆம் இடங்களில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருக்கும். 

19. ஒருவரின் ஜாதகத்தில் சனி அல்லது செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருப்பின், அவரின் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக உடல் நிலை கோளாறு , ஏதேனும் வந்து கொண்டே இருக்க வாய்ப்பு. 

20. ஒரு ஜாதகரின் வேலை அடிக்கடி மாறுதலுக்கு உட்படுபவராக இருப்பின் அவரின் ஜாதகத்தில், வெகு விரைவு கிரகங்களான சந்திரன் அல்லது புதன் அவரின் 10 ஆம் வீட்டில் இருக்கும். 

மேலே கூறப்பட்ட அனைத்தும் இந்த உலகளாவிய அனைத்து மனித இனத்திற்கும் பொருந்துவனவாக இருக்கும். மேலும் இதனைக் கொண்டு ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்ய ஏதுவாகவும் இருக்கும். 

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857
  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்
திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா கொடியேற்றம்
அத்திவரதர் பெருவிழா: அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆய்வு
அத்திவரதர் பெருவிழா: 1979-2019 ஆண்டுகளில் வியப்புக்குரிய ஒற்றுமை
பிரியாவிடை பெற்றார் அத்திவரதப்  பெருமாள்!