திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஆடி சுவாதி: திருச்செந்தூரில் வெள்ளை யானை வீதி உலா

Published: 08th August 2019 01:45 AM
திருச்செந்தூர் கோயிலிலிருந்து வெள்ளை யானை முன் செல்ல தங்கச் சப்பரத்தில் வீதி உலா வந்த சுந்தரமூர்த்தி நாயனார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜையை முன்னிட்டு, வெள்ளை யானை வீதி உலா வந்தது.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. மாலையில், கோயில் யானையின் உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரத வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோயில் சேர்ந்தனர். தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள்பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்
திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா கொடியேற்றம்
அத்திவரதர் பெருவிழா: அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆய்வு
அத்திவரதர் பெருவிழா: 1979-2019 ஆண்டுகளில் வியப்புக்குரிய ஒற்றுமை
பிரியாவிடை பெற்றார் அத்திவரதப்  பெருமாள்!