செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

வீரமங்கலம் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா

DIN | Published: 30th April 2019 02:37 AM
வீரமங்கலம் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழாவில் அம்மனை சுமந்தவாறு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்.


வீரமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழாவில் 400- க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ஆர்.கே.பேட்டையை அடுத்த வீரமங்கலம் கிராமத்தில் 11-ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெருக் கூத்து ஆகியவை நடைபெற்று வந்தன.
விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். மாலை நடைபெற்ற தீமிதி விழாயொட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
மாலை 6 மணியளவில் ஊர் பொதுமக்கள் கோயில் முன் குவிந்தனர்.
அப்போது, காப்பு கட்டிய பக்தர்கள் கோயிலை வந்தடைந்ததும், அக்னி குண்டத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை