திங்கள்கிழமை 20 மே 2019

ராமாநுஜர் அவதார உற்சவம் இன்று தொடக்கம்

DIN | Published: 30th April 2019 02:37 AM


ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயிலில் ராமாநுஜரின் 1002-ஆவது அவதார உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. வரும் மே மாதம் 8-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. 
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொன்மையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக காட்சியளிக்கிறார். கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கோயில் வளாகத்தில் கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து ஆதிகேசவப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான கடந்த வியாழக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை ராமாநுஜரின் 1002-ஆவது அவதாரத் திருவிழா தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவர் ராமாநுஜர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் ஒன்பதாம் நாளான வரும் மே மாதம் 8-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், 11-ஆம் தேதி கந்தப்பொடி வசந்தம் என்ற நிகழ்ச்சியும்  நடைபெறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
திருச்சானூரில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு
இன்று வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி பெருவிழா விமரிசையாகக் கொண்டாட்டம்
ஆலங்குடி குரு பகவான் கோயிலில் சிறப்பு யாகம்