செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் தெப்பல் உற்சவம்

DIN | Published: 30th April 2019 02:36 AM
தெப்பல் உற்சவத்தில் ஆதிசேஷன் தலைமீது கால் வைத்த  நிலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்த பெருமாள்.


மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு பெருமாளுக்கு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
ஆண்டின் 365 நாள்களும் திருமணம் நடைபெறும் ஒரே பெருமாளாக திருவிடந்தையில் கோயில் கொண்டுள்ள நித்ய கல்யாணப் பெருமாள் திகழ்கிறார். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயில், திருமண தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது. 
இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாள்தோறும் பெருமாளுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்தி வீதி புறப்பாடும், இசைக் கச்சேரியும் நடைபெற்று வருகின்றன. 
விழாவின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 
அதன் பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் புறப்பட்டு கோயில் திருக்குளத்தை அடைந்தார். அங்கு மின்விளக்கு அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த தெப்பத்தில் சுவாமி உலா வந்தார். அப்போது குளக்கரையைச் சுற்றியிருந்த ஏராளமான பக்தர்கள் தெப்பத்தின் கயிற்றை இழுத்தனர். அவர்கள், குளக் கரையில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். 
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், கோயில் பணியாளர்கள், விழாக் குழுவினர், பட்டாச்சாரியார்கள், ஊர்ப் பொதுமக்கள் செய்திருந்தனர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை