செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

திருப்பதியில் தங்க நாணய விற்பனை மையம் தொடக்கம்

DIN | Published: 30th April 2019 02:38 AM
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தங்க, வெள்ளி நாணய விற்பனை மையம்.


திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் விற்பனை செய்யும் மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை திருமலையில் விற்பனை செய்து வருகிறது. இதை பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். அதே போல் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் வாகன மண்டபம் அருகில் புதிய தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் விற்பனை செய்யும் மையத்தை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. 
இதை தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை செயல் அதிகாரி லட்சுமிகாந்தம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இங்கு 10 கிராம், 5 கிராம், 2 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 50 கிராம், 10 கிராம், 5 கிராம் வெள்ளி நாணயங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு காலை 5 மணி முதல் 9 மணிவரை ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் விற்பனையும் நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை