செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

திருநெல்வேலி வரதராஜ பெருமாள் கோயிலில் கந்தப்பொடி உத்ஸவம்

DIN | Published: 29th April 2019 11:20 AM

 

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கந்தப்பொடி உத்ஸவ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான விழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் சிறப்பு திருமஞ்சனம், வழிபாடு ஆகியவை நடைபெற்று வந்தன. 

கடந்த 22ஆம் தேதி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.  பின்னர், வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் சிகர நிகழ்வாக கடந்த 26 ஆம் தேதி தேரோட்டமும்,  27 ஆம் தேதி தாமிரவருணி நதியில் வீரராகவ தீர்த்தக்கட்டத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றன.  

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் கந்தப்பொடி உத்ஸவம், பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் சேவித்தனர்.  மாலையில் புஷ்பயாகம் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை