செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

குருட்டு அதிர்ஷ்டம் தேடி வரப்போகுதாம் சிம்ம ராசிக்காரர்களுக்கு!

DIN | Published: 29th April 2019 04:46 PM

 

இதுவரை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவந்த சிம்ம ராசி அன்பர்கள் இந்த விகாரி ஆண்டு முதல் படிப்படியான முன்னேற்றத்தைக் காணப்போகிறீர்கள்.

புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் செய்தொழிலில் துரித முன்னேற்றங்களைக் காண்பீர்கள். ஒரு புதிய வித்தியாசமான போக்கில் காலடி எடுத்து வைப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அதுபோல் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

ஏற்றத்தாழ்வுடன் கூடிய வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியான உயர்வடைவார்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவும், அரசாங்க செல்வாக்கும் உங்களை அமோகமாகக் கைதூக்கி விடும். தெய்வ வழிபாட்டினால் கைமேல் பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். வருமானம் படிப்படியாக உயரும்.

உடலாரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும். வெளிநாடு செல்ல விசா எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அத்தகைய விசா கிடைத்துவிடும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். புதிய நவீன சொகுசான வாகனம் வாங்குவீர்கள். நிர்வாகத்திறன் கூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுடன் இணக்கமானச் செயல்படுவீர்கள். அவர்களால் இருந்துவந்த பிரச்னைகள் மறையும். தனித்து தொழில் செய்தவர்கள் புதிய நண்பர்களுடன் சேர்ந்து செய்தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலர் தெய்வ பிராத்தனைகளை முன்னிட்டு அதிக செலவு செய்து நிம்மதியடைவார்கள். மற்றும் நீண்டதூர தல யாத்திரை சென்று வரவும் யோகமுண்டு.

தானங்கள் வழங்கியும் மகிழ்ச்சியடைவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். எவருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பது, முன்ஜாமீன் போடுவது கூடாது. எவ்வளவு வெற்றி அடைந்தாலும் தற்பெருமை பேசக் கூடாது. கடினமான உழைப்புக்கேற்ற இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.

தேவையான நேரத்தில் தக்க சலுகைகள் தேடிவரும். பொதுமக்கள் தொடர்புள்ள வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். தங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களால் எந்த தொல்லையும் ஏற்படாது. இல்லத்தில் திருமணம், குழந்தைப்பேறு உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த தமிழ்வருடப் பிறப்பான விகாரியில் மேலதிகாரிகளால் நன்மதிப்பைப் பெறுவார்கள். கடின உழைப்பை உங்களின் தாரகமந்திரமாக கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்லமுறையில் பேசிப்பழகவும். அலுவலக ரீதியான பயணங்களில் நல்ல அனுகூலங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருக்கும். நீண்ட நாள் பாக்கிகளும் வசூலாகிவிடும். கொடுக்கல் வாங்கல்களில் முன்னேற்றமான திருப்பங்கள் காண்பீர்கள்.

நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். அவர்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அந்நியர்களை நம்பி புதிய கடன்களை கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். கை நழுவிப்போன குத்தகை திரும்பக் கிடைக்கும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். உங்கள் பொறுப்புகளை கவனத்துடன் செய்வீர்கள். மக்கள் சேவையில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் பெறுவர். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

பெண்மணிகள் இந்த காலகட்டத்தில் காரணமில்லாமல் மனதில் சிறிது அமைதி குறையும். பெரியோர்கள் ஆதரவுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். பிள்ளைகளாலும் பெருமை அடைவீர்கள். பணவரவும் இந்தக் காலக்கட்டத்தில் சீராக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களையே பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் தேவைகள் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து அனைவரிடமும் நட்புடன் பழகுவது நல்லது.

பரிகாரம்

சிம்ம ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும், குலதெய்வ வழிபாடு செய்வதும் நலம் பலன் அளிக்கும்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை