செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

திருமலையில் வராக சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

Published: 28th April 2019 04:46 AM
வராக சுவாமி கோயில் கோபுரக் கலசத்துக்கு புனிதநீர் வார்த்து மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்திய அர்ச்சகர்கள்.

திருமலையில் வராக சுவாமி கோயில் மகாசம்ப்ரோக்ஷணம் சனிக்கிழமை காலை மிக விமரிசையாக நடைபெற்றது.
திருமலை ஒரு ஆதி வராக ஷேத்திரமாகும். ஏழுமலையான்
சேஷாசல மலை மேல் காலடி வைத்தவுடன் கோயில் கொள்ள இடம் கேட்டு ஆதி வராகரிடம் சென்றதாகவும், அதை ஏற்று ஏழுமலையானுக்கு ஆதிவராகர் இடமளித்ததாகவும் புராணம் கூறுகிறது. இதற்கான செப்பேடு தேவஸ்தானத்தின் கருவூல அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
ஏழுமலையானுக்கு வராகர் இடம் கொடுத்த ஐதீகம் காரணமாக, திருமலையில் இன்றும் முதல் பூஜை, நைவேத்தியம், மரியாதை ஆகியவை வராக சுவாமிக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களும் திருக்குளக்கரையில் எழுந்தருளியுள்ள வராகரை தரிசித்த பிறகே ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். 
இந்நிலையில் வராகஸ்வாமி கோயிலில் கடந்த 1982-ஆம்  ஆண்டு  மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. அதன் பின் இவ்விழா நடத்தப்படவில்லை. எனவே இக்கோயில்ல மகாசம்ப்ரோக்ஷணத்தை நடத்த தேவஸ்தானம் செய்ய முடிவு செய்தது. அதன்படி கடந்த 22-ஆம் தேதி அங்குரார்ப்பணத்துடன் அர்ச்சகர்கள் மகாசம்ப்ரோக்ஷணத்திற்கான வைதீக காரியங்களைத் தொடங்கினர். பின் அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல், மகாசாந்தி
யாகம், பூர்ணாஹுதி, திருமஞ்சனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இந்நிலையில், வராகர் கோயில் கும்பக் கலசத்தின் மீது சனிக்கிழமை காலை 11 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கடக லக்னத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதன்பின் வராக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் வராகர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 
வராக சுவாமி கோயில் மகாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு, ஏழுமலையான் தரிசனம் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டது. 3.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 7 மணிமுதல் 9 மணி வரை வராக சுவாமி திருமலை மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதனிடையே, வராக சுவாமி கோயில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட உள்ளதால், அதற்கான அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் இப்பணிகள் தொடங்க உள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை