திங்கள்கிழமை 20 மே 2019

ஈரோடு எல்லை மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

DIN | Published: 26th April 2019 11:06 AM

ஈரோடு, கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் வெற்றி விநாயகர், எல்லை மாரியம்மன், சக்தி காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (ஏப்ரல் 26) காலை நடைபெறுகிறது. 

கணபதி பூஜையுடன் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு பெண்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மாலை 6 மணிக்கு சக்தி அழைத்து வருதல், மண்டப அர்ச்சனை நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு சக்தி காளியம்மன், எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கணபதி வழிபாடு, மூலமந்திர ஹோமம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு யாக சாலையில் இருந்து மூலாலய கடம் புறப்படுகிறது.  6.45 மணிக்கு சக்தி காளியம்மன், எல்லை மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
திருச்சானூரில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு
இன்று வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி பெருவிழா விமரிசையாகக் கொண்டாட்டம்
ஆலங்குடி குரு பகவான் கோயிலில் சிறப்பு யாகம்