வியாழக்கிழமை 23 மே 2019

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று கிருஷ்ணதீர்த்த தெப்பல் உற்சவம்

DIN | Published: 23rd April 2019 11:04 AM

பங்குனித் திருவிழாவையொட்டி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்  கிருஷ்ணதீர்த்த தெப்பல் உற்சவம் இன்று நடைபெறுகிறது.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா, கடந்த மார்ச் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 11-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

விடையாற்றி விழாவின் நிறைவு நாளான இன்று (ஏப்ரல் 23) கோயிலின் வலதுபுறம் உள்ள கிருஷ்ணதீர்த்த தெப்பக் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி, குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் இரவு 8.30 மணிக்கு சத்யபாமா, ருக்மணி சமேதராக உற்சவர் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பல் உற்சவம்

More from the section

இரட்டைக் குழந்தை பெறும் யோகம் யாருக்கு அமையும்?
பல்வேறு சிரமங்களைக் கடந்து கர்நாடக எல்லையை அடைந்தது கோதண்டராமர் சிலை
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் கோடைத் திருநாள் விழா தொடக்கம்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
கோவிந்தா செயலி விரைவில் ஐ-போனில் பதிவிறக்கம்