வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

கலசப்பாக்கம் அருகே 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்

DIN | Published: 23rd April 2019 10:58 AM

 

கலசப்பாக்கத்தை அடுத்த காப்பலூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட 42 அடி உயர வீர ஆஞ்சநேயர் சிலைக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காப்பலூர் ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே 42 அடி உயரத்தில் அபயவரத ஸ்ரீ வீரஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல்கால பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 6 மணிக்கு 2-ஆம் கால பூஜை நடைபெற்று 10 மணிக்கு மேல் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனர்.

இதில் காப்பலூர், கலசப்பக்கம், காங்கயேனூர், வசூர், குருவிமலை, விண்ணுவாம்பட்டு என காப்பலூர் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அத்திவரதரை தரிசிக்கவில்லையே என்ற கவலையா? (விடியோ)
வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்! புகைப்படங்கள்
கிருஷ்ணருக்கு மட்டும் இதெல்லாம் பிடிக்கிறது ஏன்?
இந்த வாரம் (ஆக.23 - 29) அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?
சென்னையில் திருப்பதியைப் போன்ற மிகப்பெரிய கோயிலைக் கட்ட தேவஸ்தானம் முடிவு