புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

ரிஷபம், கன்னி, மகரம் ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய தெய்வம்!

Published: 22nd April 2019 12:15 PM

 

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள். கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்.

நீரும் நெருப்பும் இணையாது. அதேபோல நிலத்தோடு காற்றும் இணையாது. நெருப்போடு காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலவே இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாக அமையும். இதில், நில ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். ரிஷபம் - கன்னி - மகரம் ஆகிய ராசிகள் பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் நில ராசிகளில் வரும். 

இந்த மூன்று ராசிகளுக்கும் உள்ள அதிபதிகள் (புதன் - சுக்கிரன் - சனி) ஒரே பிரிவில் வருவார்கள். சனி தான் இவர்களில் பிரதானமாக இருந்து செயல்படுவார். இந்த ராசிக்காரர்கள் எதையும் எளிதில் நம்பும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுவான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் கோபம் வந்தால் சும்மா அதிரும் பாருங்க. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சும்மாவா சொன்னார்கள்.

இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்த மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.

இவர்கள் தினமும் ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை வணங்கி வந்தாலே போதுமானது. வேறு பெரிய பரிகாரங்கள் இவர்களுக்கு தேவையில்லை.

நில ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய காவல்தெய்வங்கள்

பைரவர் - நந்தீஸ்வரர் - கருடன் - ஆஞ்சநேயர் போன்ற சுற்றுக் கோவில்களில் இருக்கும் தெய்வங்கள் மற்றும் கிராமங்களில் காவல் தெய்வங்களாக இருக்கும் தெய்வங்களை வணங்கி வர வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ்வார்கள்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ரிஷபம் மகரம் கன்னி virgo நில ராசிகள் earth signs Capricorn Taurus

More from the section

 சித்தர்களின் பூமி என்றழைக்கப்படும் திருவாரூர் சித்தாடி சிவன்கோயில்!
காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 2. திருக்கச்சூர் விருத்திட்ட ஈஸ்வரர் மற்றும் ஒளஷதபுரீஸ்வரர்
சொர்க்கத்தை அடைய இதுவும் ஒரு வழி!
திருவாலங்காடு திருத்தலத்தில் உழவாரப்பணி
உண்டியல் காணிக்கை ரூ 3.92 கோடி