தேவி கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா தொடக்கம்

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோயில்புரத்தில் உள்ள தேவி கரிமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா வியாழக்கிழமை சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. 
திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விஷ்ணு துர்க்கை.

திருவடிசூலம் ஆதிமகா சக்தி பீடத்தில் தேவி கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை முதல் விழுப்புரம், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருவடிசூலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி சுமந்து கோயிலுக்கு வந்தனர். தாங்கள் கொண்டுவந்த நெய்யைக் கொண்டு, கோயிலில் உள்ள சுயம்பு சொர்ணாம்பிகைக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அலங்காரமும் மகாதீபாராதனையும் நடைபெற்றன. 
விழாவையொட்டி அம்மனுக்கு பாதாபிஷேகமும், விநாயகர், விஷ்ணு, துர்க்கை, மந்திர வாராகி, ராஜமாதங்கி, பிரத்யங்கராதேவி உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் மதுரை முத்து சுவாமிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com