26 மே 2019

வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தேரில் உற்சவர்கள் வலம்

DIN | Published: 19th April 2019 02:51 AM
வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2ஆம் நாளான வியாழக்கிழமை, தங்கத் தேரில் வலம் வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.


திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை, தங்கத் தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
திருமலையில் ஆண்டுதோறும் கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி புதன்கிழமை வசந்தோற்சவம் தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி தங்கத் தேரில் மாட வீதியில் வலம் வந்தார். தங்கத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 
அதன்பின் மதியம் 2 மணிக்கு உற்சவர்களுக்கு கோயில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் என ஓராண்டுக்கு 3 முறை மட்டுமே தங்கத் தேர் புறப்பாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வரதராஜப் பெருமாள் கோயிலில்  தீர்த்தவாரி உற்சவம்
தேர்தலிலும் தேர்வுகளிலும் வெற்றிபெற்றால் மட்டும் போதுமா? பதவி கிடைக்க பானு சப்தமியில் சூரியனை வணங்குங்க!
பெண்கள் வெறுத்து ஒதுக்கும் ஆண் ஜாதக அமைப்பு!!
மயில் வாகனத்திற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?
உளுந்தூர்பேட்டை பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்