வியாழக்கிழமை 23 மே 2019

திருமலை: இன்று கருட சேவை ரத்து

DIN | Published: 19th April 2019 02:50 AM


திருமலையில் பௌர்ணமி தோறும் நடைபெறும் கருடசேவை சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி இரவு வேளையில் கருட சேவை நடத்தப்படுவது வழக்கம். பிரம்மோற்சவ நேரத்தில் திருமலைக்கு வந்து கருட சேவையைக் காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி கருட சேவையை கண்டு வழிபடுவர். 
இந்நிலையில் திருமலையில் தற்போது வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. எனவே, வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை ஒட்டி நடைபெறவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இரட்டைக் குழந்தை பெறும் யோகம் யாருக்கு அமையும்?
பல்வேறு சிரமங்களைக் கடந்து கர்நாடக எல்லையை அடைந்தது கோதண்டராமர் சிலை
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் கோடைத் திருநாள் விழா தொடக்கம்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
கோவிந்தா செயலி விரைவில் ஐ-போனில் பதிவிறக்கம்