வராகர் கோயிலில் ஏப்.23 முதல் மகாசம்ப்ரோக்ஷணம்

திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் வரும் 23 முதல் 27-ஆம் தேதி வரை மகாசம்ப்ரோக்ஷண விழா நடைபெற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
வராகர் கோயிலில் ஏப்.23 முதல் மகாசம்ப்ரோக்ஷணம்


திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் வரும் 23 முதல் 27-ஆம் தேதி வரை மகாசம்ப்ரோக்ஷண விழா நடைபெற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலை அன்னமய்யா பவனில் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்வி எழுப்பிய பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் திருமலை நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் விரைவில் ஆவியாகி வருகிறது. எனவே, திருமலைக்கு வரும் பக்தர்கள் நீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். 
நீர்த் தேக்கங்களில் 2,081 மில்லியன் லிட்டர் நீர் நிலுவையில் உள்ளது. திருமலையில் தினசரி பயன்பாட்டிற்கு 14 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதன்படி நீர்த்தேக்கங்களில் 143 நாள்களுக்குத் தேவையான நீர் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. கீழ் திருப்பதியில் உள்ள கல்யாணி அணையின் நீரையும் சேர்த்தால் 173 நாள்களுக்குத் தேவையான நீர் உள்ளது. ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக 278 கல்யாண மண்டபங்கள் உள்ளன. அவற்றை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான வாடகை அறைகளின் முன்பதிவு விவரமும், தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்களில் நடக்கும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் வரும் 23 முதல் 27-ஆம் தேதி வரை மகாசம்ப்ரோக்ஷண விழா நடைபெற உள்ளது. 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை ஏழுமலையானுக்கு வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது.
விகாரி ஆண்டுக்கான பஞ்சாங்கம் 60 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அவை நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான விசாரணை அலுவலகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com