73,603 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு

திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் 73,603 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. 


திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் 73,603 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. 
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜூலை மாதத்துக்கான 73,603 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. 
அவற்றை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.  இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் கிடைத்த பக்தர்கள் 3 நாள்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை, விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் வழங்குகிறது. நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. குலுக்கல் முறையில் உள்ள டிக்கெட்டுகள் விவரம்:

சேவை    டிக்கெட் எண்ணிக்கை
சுப்ரபாதம்    7,953
தோமாலை    130
அர்ச்சனை    130
அஷ்டதள பாத பத்மாராதனை    240
நிஜபாதம்    2,300
மொத்தம்    10,753
மற்ற சேவா டிக்கெட்டுகள்
கல்யாண உற்சவம்    14,250
ஆர்ஜித பிரம்மோற்சவம்    8,250
வசந்தோற்சவம்    15,950
ஊஞ்சல் சேவை    4,500
சகஸ்ர தீபாலங்கார சேவா    17,400
விசேஷ பூஜை    2,500
மொத்தம்    62,850

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com