தெலுங்கு வருடப் பிறப்பு : கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

தெலுங்கு வருடப் பிறப்பான உகாதியை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
ஏழுமலையான் கோயில் தங்கக் கோபுரத்தை சுத்தம் செய்த தேவஸ்தான அதிகாரிகள். 
ஏழுமலையான் கோயில் தங்கக் கோபுரத்தை சுத்தம் செய்த தேவஸ்தான அதிகாரிகள். 


தெலுங்கு வருடப் பிறப்பான உகாதியை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
ஏழுமலையான் எழுந்தருளியிருக்கும் கோயிலையும் ஓர் ஆழ்வாராக உருவகப்படுத்தி கோயிலை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தச் சடங்கை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று வைகானச ஆகமம் குறிப்பிடுகிறது. அதன்படி, தெலுங்கு வருடப் பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன்னர் வரக் கூடிய செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோயில் சுத்தப்படுத்தப்படுகிறது.
உகாதி பண்டிகை வரும் 6-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலையில் ஏழுமலையான் கோயில் சுத்தப்படுத்தப்பட்டது. கஸ்தூரி மஞ்சள், குங்குமம், சந்தனம், செஞ்சந்தனம், ஏலக்காய், குங்கலியம், புனுகு, கோரைக் கிழங்கு, பச்சைக் கற்பூரம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்கள் நிறைந்த கலவையைப் பூசி கோயில் கருவறை முதல் மகாதுவாரம் வரை சுத்தப்படுத்தப்பட்டது. இப்பணியை மேற்கொள்ளஏதுவாக, கோயிலில் அமைக்கப்பட்டிருந்த உயர்மேடைகள், தரிசன வரிசைகள் ஆகியவை அகற்றப்பட்டன.  கோயில் சுத்தப்படுத்தப்பட்ட பின் கருவறைக்குள் உற்சவமூர்த்திகளின் சிலைகள், பூஜைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு பூஜைகள் தொடங்கின. 
அதன் பின் ஏழுமலையான் கோயிலில் புதிய திரைச்சீலைகள் அமைக்கப்பட்டன. அகற்றப்பட்ட உயர்மேடைகளும், தரிசன வரிசைகளும் மீண்டும் நிறுவப்பட்டன. இந்த நிகழ்வில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com