திங்கள்கிழமை 22 ஜூலை 2019

மிதுன ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைத் தருமா? 

Published: 26th September 2018 02:14 PM

 

2018-ம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மிதுனம் (மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம்1,2,3 பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு சனியின் நேர் பார்வை. ஆக இந்த ஓராண்டு முழுவதும் எடுத்த காரியங்களை முடிக்கத் தடை, தாமதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்திற்குக் காரியங்கள் நடக்காது. அதேபோல்  9-ம் இடமான தகப்பனார் ஸ்தானத்திற்கும் சனியின் பார்வை இந்த ஆண்டு முழுவதும் இருக்கிறது. ஆக தகப்பனாருடனான உறவு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. கார்த்திகை, மார்கழி மாதங்களில்  மனக்கசப்பு சற்று அதிகமாகவே இருந்து வரும். உயர் கல்வி சேர விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய துறையில் கிடைப்பது கடினம்.  

உயர் கல்வி மட்டுமல்லாது கல்லூரியில் சேர விழையும் மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பிய துறையில் கிடைப்பதற்குக் கால தாமதம் ஆகும். அடுத்து குடும்ப வாழ்க்கையைப் பார்க்கும்போது 2-ம்  இடமான குடும்ப ஸ்தானத்தில் ராகு ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் செவ்வாயின் பார்வையும் 2-ம் இடத்திற்குக் கிடைக்கிறது. ஆகவே அந்த மாதங்களில் குடும்பத்தில், சச்சரவு, மனஸ்தாபங்கள்  ஆகியவை இருக்கும். இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குருவின் பார்வை 6-ம் வீட்டிலிருந்து தன ஸ்தானத்திற்குக் கிடைப்பதால் உத்தியோக வேட்டையிலிருப்போருக்கு வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.  

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணக் காலம் எப்பொழுது வருகிறது எனப்பார்க்க வேண்டுமல்லவா? பொதுவாக 7-ல் சனி இருந்தாலே தாமதமான திருமணம்தான். மாசி மாதம் 22-ம் தேதிக்குப் பிறகு  கேது வேறு 7-ம் வீட்டிற்கு வருகிறார். ஆகத் திருமணத்திற்கு இருக்கும் ஆண், பெண் தக்க பரிகாரம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் ஜாதகத்தில் தசா புக்திகள் மிக வலுவாக  இருந்தால்தான் திருமணம் இந்த ஆண்டு சாத்தியம்.  

மார்கழி, தை மாதங்களில் உத்தியோக சம்பந்தமான பணி இடமாறுதல் இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் இருக்கும். இளைய சகோதரத்துடனான உறவில் கார்த்திகை, மார்கழி, சித்திரை ஆகிய  மாதங்களில் சுமுகமான நிலை காணப்படவில்லை. அதே சமயத்தில் பங்குனி, சித்திரை, புரட்டாசி மாதங்களில் அவர்கள் மூலம் அனுகூலமும் காணப்படுகிறது.  

வீடு, வாசல் வாங்க விழைவோருக்கு வைகாசி, ஆனி மாதங்கள் அனுகூலமாகத் தெரிகின்றன. மகப்பேற்றை எதிர்நோக்கியிருக்கும் பெண்களுக்கு மார்கழி, தை மாதங்களில் மகப்பேறு இருக்குமேயாகில்  அப்போது அறுவை சிகிச்சை உதவியை நாட வேண்டியது இருக்கும். மற்ற மாதங்களில் மகப்பேற்றை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் மருத்துவ உதவியுடன் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த ராசிக்கு 7-ம் வீட்டு அதிபதியாகிய குரு 6-ம் வீட்டில் இருப்பதால் கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகளுக்கு நிறைய இடமுண்டு. ஆகவே இருவரும் சற்று விட்டுக் கொடுத்துச் செல்வது அவர்களுக்கு நல்லது.
 
வியாபாரிகளுக்கு:
7-ல் சனி இருப்பது பொதுவாக வியாபாரத்திற்கு நல்லது அல்ல. அதற்காக வியாபாரத்தை நிறுத்திவிட முடியாது. சற்று எச்சரிக்கையுடன் செய்வது நல்லது.

உத்தியோகத்திலிருப்போருக்கு: 10-ம் வீட்டிற்கு உடைய குரு 6-ல் இருப்பதால் பதவி உயர்வை எதிர்பார்ப்போருக்குப் பதவி உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதேபோல் வேலை வேட்டையில் இருப்போருக்கு வேலைக் கிடைக்கும். பொதுவாக, உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவான குருப் பெயர்ச்சி இது.

*****

கடக ராசிக்காரர்களே, உங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களைப் படிக்க நாளை வரை காத்திருங்கள்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மிதுனம் தடை சனி குருப் பெயர்ச்சி தாமதம்

More from the section

திருவள்ளூர் திரௌபதி அம்மன் கோயிலில் மகா பாரத பெருவிழா
மனக்குழப்பம் உள்ளவர்கள் செல்லவேண்டிய காவனூர் சிவன்கோயில்
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஓய்வறைகள் அமைக்கப்படும்: ஆட்சியர் பேட்டி
அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி 
திதி சூனியத்தில் நேர் - எதிர்மறை கோட்பாடுகள்!