திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டது ராமாநுஜர் கோயில் யானை

DIN | Published: 13th December 2018 02:27 AM
முகாமுக்கு  லாரியில் கொண்டு செல்லப்பட்ட  ஸ்ரீபெரும்புதூர்  ராமாநுஜர்  கோயில்  யானை  கோதை.
Advertising
Advertising


மேட்டுப்பாளையம் தேக்கப்பட்டு பகுதியில், 48 நாள்கள் நடைபெற உள்ள யானைகள் புத்துணர்வு முகாமுக்கு ஸ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் கோயில் யானை கோதை லாரி மூலம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாள்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. யானைகளுக்கான மறுவாழ்வு முகாம் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி, வன பத்திரகாளி அம்மன் கோயில் அருகே உள்ள பவானி ஆற்றங்கரை பகுதியில் வரும் 14-ஆம் தேதி தொடங்கி, வரும் ஆண்டு ஜனவரி, 31-ஆம் தேதி வரை, 48 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில், யானைகளுக்கு சத்தான இயற்கை, மூலிகை உணவுகள், ஆரோக்கியத்துக்கான குளியல் மற்றும் விளையாட்டு, மருத்துவம், உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் புத்துணர்வு அளிக்கப்பட உள்ளது.
இந்த முகாமில் கலந்து கொள்ள ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி (ராமாநுஜர்) திருக்கோயில் யானை கோதை (21) புதன்கிழமை லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, கணக்காளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

More from the section

வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்
மகரவிளக்கு பூஜை நிறைவு: சபரிமலை கோயில் நடையடைப்பு
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா 
வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா
தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்