திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

திருவண்ணாமலை மகா தீப மலையில் புனித நீர் தெளிப்பு: அண்ணாமலையார் பாதத்துக்கு பூஜை

Published: 13th December 2018 02:41 AM
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட, மலை மீதுள்ள அண்ணாமலையார் பாதம்.
Advertising
Advertising


திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, மலை மீது பக்தர்கள் ஏறிச் சென்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க புதன்கிழமை மலை மீது புனித நீர் தெளிக்கப்பட்டதுடன், மலை உச்சியில் உள்ளஅண்ணாமலையார் பாதத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் 2,668 அடி உயர மலை அமைந்துள்ளது. இந்த மலையையே சிவனாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 
ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மகா தீபத் திருவிழாவன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அன்றைய தினமும், தொடர்ந்து 11 நாள்கள் எரியும் மகா தீபத்தை ஏற்றவும், மகா தீபத்தை தரிசிக்கவும் மலை மீது பக்தர்கள் சென்று வருவர். 
இந்த மலையையே சிவனாக வழிபடுவதால், மலையை காலால் மிதித்ததால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க, தீபத் திருவிழா முடிந்ததும் மலை மீது புனித நீர் தெளிக்கப்படும்.
அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் புனித நீர் கலசங்களுக்கு கோயில் சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜை செய்தனர். 
பின்னர், புனித நீர் கலசங்களை பக்தர்கள் எடுத்துச் சென்று மலையின் பல்வேறு பகுதிகளில் தெளித்து வழிபட்டனர்.
அண்ணாமலையார் பாதத்துக்கு பூஜை: மேலும், மலையின் உச்சியில் உள்ள ஸ்ரீஅண்ணாமலையார் பாதத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.


 

More from the section

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா 
வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா
தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
காவடியின் தத்துவம் தெரியுமா? 
பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!