கட்டுரைகள்

சமுதாயத்தில் எனது நிலை எப்படி இருக்கும்?

24th Nov 2022 04:40 PM | ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

ADVERTISEMENT

 

அரிஸ்டாட்டல் கூற்றுப்படி சொல்லவேண்டுமானால், மனிதன் ஒரு சமுதாய விலங்கு. ஆம் ஒரு மனிதனால் தனியாக வாழ்வதென்பது இயலாத காரியம் தான். பரஸ்பர சார்பு அச்சாணிகளை  முறித்து விட்டு வாழ முடியாது. (No man can break the shackles of mutual dependence.)  தாயும் தொப்புள் கொடி உறவும் என்பதைப் போல் ஒரு மனிதன் இறக்கும் வரை சமூகத்தை / சமுதாயத்தை  விட்டு விலகி விட முடியாது. 

ஜோதிடம் மூலம் அறிய முடியாத விஷயம் எதுவுமே இல்லை என நிச்சயமாகச் சொல்லலாம். ஜோதிடரின் ஆழ்ந்த ஜோதிட  அறிவும், அனுபவமும் நிச்சயம் அனைத்தும் வெளிக்கொணர முடியும். அதற்கு பொறுமையும், கால அவகாசமும் தேவை. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு , 11ஆம் இடம் அந்த நபரின் வாழ்க்கை, சமூகத்தில் எவ்வாறு இருக்கும் என்பதனை தெள்ளத்தெளிவாகக் கூறும். இது தான் ஒருவரின் சமூக செயல்பாட்டின் கட்டமைப்பை, அவர் எந்த வகையில் தமது தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார் மற்றும் செயல்படுத்துகிறார் எனச் சொல்லலாம். இந்த 11ஆம் வீடு தான் ஒரு குழுவில், மற்றவர்களுடன் ஆன தொடர்பு பற்றியும், மற்றவர்களுடனான பழகுதல் பற்றியும் தெரிவிக்கும்.

இன்றைய கால கட்டத்தில் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களையும் பார்க்கிறோம், நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவதையும் காண்கிறோம். இது அவரவர் தனித்தன்மை மற்றும் பிறவிக் குணம் என்றால், மிகை ஆகாது. அதனை நாம் எவ்வாறு முன்கூட்டியே காண்பது என்பதைப் பற்றிய ஒரு குறிப்பேடு தானே தவிர முழுமையான கட்டுரை இது ஆகாது.

ADVERTISEMENT

லக்கினத்திற்கு 11ஆம் வீட்டில் நிற்கும் கிரகங்கள் தான், ஒரு ஜாதகரின் தனிதன்மையை பற்றியும், அவர் மற்றவர்களுடனான தொடர்பு, பிரபலம், புகழ், நிராகரிப்பு போன்றவற்றை வெளிப்படுத்துவனவாக இருக்கும். மேலும் இந்த வீடு ஒருவரின் ஆசை, ஆசைகள், குழு நடவடிக்கைகளில் இவரின் பங்கு போன்றவற்றைப்  பற்றி எடுத்துச் சொல்லும். அதுமட்டுமல்லாமல், மற்றவர்களின் தொடர்பில் - இவரின் அணுகுமுறை பற்றியும் விளக்கும்.

சில மனிதர்கள் அவர்கள் அடையும் இலக்கிற்கு இவரின் பங்கு எவ்வாறு இருக்கும் என்பதைக் கூறும். இந்த கட்டுரையில் கூறப்பட்டது அனைத்தும் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் சரியாகவே இருக்கும். வேறு தீய கிரக சேர்க்கை, பார்வை, சாரம் இருப்பின் மாறுதலுக்கு உட்படும். சிலருக்கு அனைத்துமே சரியாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11 ஆம் இடத்தில் "சூரியன்" இருந்தால்...

வெளிப்படையானவர். இவராகவே முன்வந்து மற்றவர்களுடன் தொடர்பு கொள்வார். குழுவின் வெற்றிக்குப் பாடுபடுவர். இவரின் இலக்குகள் சுயநலமின்றி இருக்கும். இவரின் நண்பர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பர். எப்போதும் தாராளமான மற்றும் உன்னதமான உதவும் எண்ணம் இருக்கும்.

ஒருவரின்  பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில் "சந்திரன்" இருந்தால்... 

இவருக்கு, நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.ஆனால், திடீரென்று அவர்களை பற்றிய எண்ணம் மாறக்கூடும். நண்பர்களை, தமது சொத்து போல பாவிப்பார். அவர்களை  முழுவதுமாக தமது விருப்பத்திற்கு அடிபணியச் செய்வார். இந்த மாதிரியான செயல்களால், ஒவ்வொருவரையும், அதிக பாதுகாப்பாக நடத்துவார் தமது நண்பராக நினைக்கும் வரை.அதன் மூலம் இவரின் எல்லா பிரச்னைகளும் தீர்த்துக்கொள்வார். அவர்களின் நடைமுறை திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், பெரிதும் பயன் அடைவார்.

ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11 ஆம் இடத்தில் "செவ்வாய்" இருந்தால்...

இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். தமக்காக அதிகமான இலக்குகளை நிர்ணயிப்பர். கனவுகளை நினைவாக்குபவர்கள். குழுக்களில் நன்கு உழைப்பவர்கள். அதனாலேயே, பெரிய இலக்குகளை சர்வ சாதாரணமாக அடைபவர்கள். செவ்வாய் ஒரு முரட்டுத் தனமான கிரகம். நல்ல நிலையில் இருப்பின் தீய கிரகங்களின் பார்வை இல்லாத போது இவர்கள், தலைவர்கள் ஆகக்கூடும். தீய கிரகங்களின் பார்வை கூட்டு ஏற்படும் போது, இவர்கள் சுயநலவாதிகள் ஆகிறார்கள். அதே சமயம் முரட்டுத் தனமும் கூடிவிடுகிறது. 

ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11 ஆம் இடத்தில் "புதன்" இருந்தால்...

இவருக்கு, நண்பர்கள் இருக்க மாட்டார்கள். இவரின் அறிவு மேலோட்டமான மற்றும் பழமையானதாக இருக்கும். இவர் தமக்கென்றே சில இலக்குகளை நிர்ணயம் செய்து கொள்வார்.
இவரைப் பற்றி சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், அவரது மனதில் எது தோன்றுகிறதோ அதன்படி இருப்பவர் எனலாம். தந்திரமான மற்றும் கண்டுபிடிப்பு ஆளுமை (inventive personality ) கொண்டவர். இவர் தம்மைவிட இளமையானவர்களுடன் நட்பு கொள்ளுவார். அவர்களுக்கு இவர் நிரம்ப கற்றவர் மற்றும் புத்திசாலியாகத் தெரிவார். நிரம்பத் தெரிந்தவர்கள் மற்றும் கற்றறிந்தவர்கள் உதவியுடன் மதிப்புமிக்க வேலைகளை அடைவார். 

ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில் "குரு" இருந்தால்...

இவரிடம் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இவரிடம் அதிகமான எண்ணிக்கையில் உண்மையான மற்றும் நம்பகமான நண்பர்கள் இருக்கக்கூடும். நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் இவருக்கு எந்த சூழலிலும் உதவுபவராக இருப்பர். சமூகத்தில் இவருக்கு செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தொடர்பில் இருப்பர். இவரின் மனதில் நல்ல திட்டங்கள் , கருத்துக்கள் போன்றவற்றை சுயநலம் மற்றும் ஆர்வமின்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார். இவரின் பிரதான எண்ண அலை, ஒரு கருத்தின் சாரம் அறிவது, அது எப்படி பலனளிக்கும் என்பதில் நாட்டம் அதிகம் இருக்கும். 

ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11 ஆம் இடத்தில் "சுக்கிரன்" இருந்தால்...

இவரை யாரும், எளிதில் சந்திக்கும் ஒரு நேசமான நபராய் இருப்பார். இவரின் ஓய்வு நேரத்தைப் பெரிய நிறுவனங்களில் செலவிடுவார். இவரின் ஒத்த குணமுடையவர்களுடன் நேரத்தை செலவழிப்பார். இவரின் நண்பர்கள், கலை இலக்கியம் போன்றவற்றிற்கு இவரின் இலக்கை அடைய உதவுவார்கள். இவரின் வளர்ச்சிக்கும் சுய உணர்தலுக்கும் இவரின் நண்பர்களின் பங்கு இருக்கும். இவர் ஒரு அசாதாரணமான நபர்கள் சந்திக்கும் கூட்டத்தில் இருந்தாலும் தனித்து இவர் தமது சுய ரூபத்தில் காட்சி தருபவராகவே இருப்பார். ஆனால், வெளிப்புறத்தில் தனித்து காணப்பட்டாலும், ஆழ்ந்த உள்நோக்கம் ஏதும் இருக்காது. 

ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11 ஆம் இடத்தில் "சனி" இருந்தால்...

இவருக்கு அதிகமாக வயதான மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களே நண்பர்களாக இருக்கக்கூடும். தலைவர்களும் அதிகாரிகளும் இவரை நட்புகொள்ள ஆசைப்படுவர், காரணம் இவரிடம் புத்திசாலித்தனம் மற்றும்  அதனை அனுபவத்தில் செயல்படுத்துதலே ஆகும். இப்படிப்பட்டவர்கள், எப்போதும் பொது காரணங்களையே நினைத்துக் கொண்டிருப்பார். இவர் தமது எண்ணங்களைத் தெளிவாகவும் நன்கு அடித்தளமிட்டதாகவும் எடுத்துரைப்பார். வேண்டுமானால் இவரின் திட்டங்கள் காலதாமதம் ஏற்படலாம், ஆனால் முடிவு மதிப்புக்குரியதாகவே இருக்கும். 

ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11 ஆம் இடத்தில் "ராகு"  இருந்தால்...

இவர் தமது நண்பர்களிடம் ஆர்வமின்றியே நட்புடன் பழகுவார் . அதனையே அவர்களும் இவரிடம் காண்பிப்பர். விசித்திரமான மனிதர் மற்றும் தனித்துவமாக திகழ்பவராக இருக்கக் கூடும். இவருக்கு நிறைய அறிமுகமானவர்களின் பெரிய வட்டம் இருக்கும். இவரின் செய்கைகளால், அவர்களிடம் இருந்து கணிக்க முடியாத படியான வழிகளில் உதவி பெறுவதும் ஏற்படும். அதேசமயம் யாருடைய ஜாதகத்திலாவது ராகு சாதகமற்ற இடத்தில் இருக்குமே ஆனால், அப்படிப்பட்ட ஜாதகருக்கு நண்பர்களுடன் பிரச்னை, நண்பர்களுடனான வட்டத்தில் பொதுவான ஆர்வம், பாசங்களில்  பிரச்னை மற்றும் அந்நியப்படுதல் போன்றவை நிகழக்கூடும்.

ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11 ஆம் இடத்தில் "கேது" இருந்தால்...

அசாதாரணமான ஆளுமை கொண்டவராய் இருக்கக்கூடும். திருத்தமுடியாத லட்சியவாதியாக இருப்பார், அதனால் ஏமாற்றம், விரக்தி ஏற்படலாம். உயர் படிப்பு படிக மற்றும் அறிவார்ந்த நண்பர்களை ஈர்ப்பவராக இருப்பார். அடிக்கடி, கலைத்துறையில் உள்ளவர்களை ஈர்ப்பவராக இவர் இருப்பார்.

அவர்களுடனான தொடர்பு உருவாகிறது மற்றும் தன்னை வெளிப்படுத்துவதாயும் அது திகழ்கிறது.  அதே சமயம் ஜாதகத்தில் சாதகமற்ற இடத்தில் கேதுவின் இருப்பு இருக்குமாயின், நண்பர்கள், இவரை ஏமாற்றுபவராகவும், இவருக்கு துரோகம் செய்பவர்களாகவும் இருப்பர். இப்படிப்பட்டவர், ஏதேனும் ஒரு தீவிர சூழ்நிலையில், தாம் சிக்காமல் நல்ல கவனம் செலுத்தி ஒரு வழியை கண்டுபிடிக்க இயலும். 

மேற்சொன்ன இவைகளை நன்கு உணர்ந்து , எச்சரிக்கையாக இதனைக் கொண்டு வாழ்வில் முன்னேறுவோம். ஜோதிடம் ஒரு எச்சரிக்கையை அன்றி முடிவானது அல்ல. மனித சமுதாயம் தலைநிமிர்ந்து முன்னேறக் கூறும் அறிவுரைகள் தாம் இவைகள்.  

தொடர்புக்கு : 98407 17857

 

ADVERTISEMENT
ADVERTISEMENT