கட்டுரைகள்

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் திரிகோண அதிபதிகள்

24th Jun 2021 10:00 AM | ஜோதிட சிரோன்மணி தேவி

ADVERTISEMENT

இந்த பிரபஞ்ச சக்தியில் உள்ள அனைத்து ஜீவராசிகள் முழுவதும் பஞ்சபூத தத்துவங்கள் அடிப்படையில்  உள்ளடங்கிய  சாத்வீக, தாமச, ராட்ச ஆகிய முக்குணங்களால்  வடிவமைக்கப்பட்ட, தசைநார்களுடன்  கூடிய  ஆத்மா என்று கூறலாம். நாம் வாழும் இந்த வாழ்க்கை வட்டமானது 360 பகையில் உள்ளடங்கியது. இங்கு உள்ள கிரகங்கள் நம்மை சீற்படுத்தும் என்று கூறலாம். ஒருவரின் இன்பம், குறிகோளுடைய வெற்றி அனைத்து பாக்கியங்களும் அவரவர் வைத்திருக்கும் பூர்வப்புண்ணியம் மற்றும்  கர்மபதிவு கொண்ட வைப்பு நிதியின் வட்டித் தொகையாகும். நாம் செய்யும் அனைத்து நற்காரியங்கள் மற்றும் கெட்ட செயல்கள் அனைத்தும் நம்முடைய பூர்வ புண்ணிய கணக்கில் சேர்க்கப்படும். இவற்றின் சுமையை  ஜெனன ஜாதகத்தில் திரிக்கோணங்கள்  என்று சொல்லப்படும் 1, 5, 9 பாவங்கள் வாயிலாக செயல்படும்.

திரிக்கோணத்தை பிரிக்கும் பொழுது திரி என்றால் மூன்று,  கோணங்கள் என்பது மூலைகள் என்று பொருள். ஒவ்வொரு மூலைகளும் 120 பாகை கொண்டது. அவற்றின் மூன்று பிரிவின் கூட்டுத் தொகை ஒரு வட்ட பாகையில் அடங்கும் (360). நம்முடைய வாழ்வின் நோக்கங்கள் அதற்கேற்ப செயல்கள் அனைத்தும் இந்த  திரிகோணங்கள் என்ற பெருங்கடல் ஆகிய கர்மாக்களை கடக்க வேண்டிய சூழ்நிலையில் அமர்ந்துள்ளோம்.  நம்முடைய பிறவியின் கடைசி அத்தியாயம் ஜீவ முக்தியாக இருக்கவேண்டும். 

எளிமையாக சொல்ல வேண்டுமானால் நம் ஜாதக கட்டத்தில் உள்ள முக்கோண வடிவமைப்பில் உள்ள திரிக்கோண முறையில் அவரவர் நோக்கம் எதை நோக்கி செல்கிறோம் என்று படம் போட்டு காட்டி விடும்.  கிரகங்களின் கதிர் வீச்சு மூன்று கோணங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருந்து அந்த ஜாதகரை இழுத்துச் செல்லும். எடுத்துக்காட்டாக ஒருவர் முற்பிறவியின் தொடர்ச்சியாக பெண்  சாபம் அல்லது முன்னோர்கள்  சாபம் பெற்று இருந்தால் அதே சாபத்தை இப்பிறவியிலும் கிரகங்கள் வாயிலாக செய்ய வைக்கும்.

திரிகோண பாவங்கள் நான்காக பிரிக்கப்படும். அவை அறம்(தர்ம), பொருள்( கர்ம), இன்பம்(காமம்), வீடு(மோட்ச) அடங்கியது.  மனிதப் பிறவியில்  முக்கியமானது; நம்முடைய பாதையின் பார்வை தர்ம திரிகோணம் (1,5,9)  மற்றும் மோட்ச திரிகோணம் (4,8,12 ) நோக்கி நாம் செல்லவேண்டும். இது தவிர நம்முடைய பிறவியானது இன்பம், மற்றும் குடும்ப பந்தத்தின் கர்மாவிற்கு ஏற்ப செல்லவேண்டும். இங்கு கர்மகாரகன் சனியானவர், சுப தன்மை கொண்ட குருவானவர் தங்களுடைய கோட்சாரம் மற்றும் தசா புத்தியில் ஜாதகருக்கு திருமண பந்தத்தையும் குழந்தை பேரையும் தரவல்லவர். இது கர்ம திரிகோணம் (2,6,10), காம திரிகோணம் (3,7,11) சார்ந்து அமையும்.

ADVERTISEMENT


இவற்றில் உங்களுடைய பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப எல்லா பாக்கியமும் கிட்டும்.  ஒவ்வொரு திரிகோண பாவங்களையும் அதன் முந்தைய திரிகோண பாவங்கள் சுப மற்றும் அசுப பலன்களை தரவல்லது.  நிம்மதியான, மனநிறைவான வாழ்க்கை ஒருவனுக்கு அமைந்துவிட்டால் அவனுடைய ஜாதகத்தில் 1, 5, 9 பாவங்கள் பலம் பெற்றிருக்கும். முக்கியமாக இந்த அமைப்பு அனைவருக்கும் அமையாது. சிலருக்கு  வெளிப்பார்வைக்கு பகட்டான வாழ்கை தெரியும், ஆனால் அவர்கள் மனதில் ஒரு சில ஏக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு முக்கிய காரணகர்த்தா  திரிகோண அதிபதிகள் மற்றும் அங்குள்ள கிரகங்கள்.

முதலில் ஒருவர் ஜாதகக் கட்டை எடுக்கும் பொழுது, அவருக்கு 1,5,9 ஸ்தானங்கள் உடன் கர்மா என்று கூறப்படும் 10 பாவமும் வலுவுடன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த ஸ்தானத்தில் பகைவர்கள் மற்றும் பாதகாதிபதி / அஷ்டமாதிபதி சேர்க்கை பார்வை பெறாமல் இருந்தால் அவர்கள் ராஜயோகர்கள். அந்த ஜாதகர் வாழ்நாளில் நினைப்பதெல்லாம் செய்து முடித்து, புகழ் பெரும் அதிர்ஷ்டசாலிகள்.  ஒவ்வொருவர் ஜாதகத்திலும் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ ஸ்தானங்கள் கட்டாயம் கெட்டிருக்கும். ஒரு சிலர் வாழ்வின் அடிமட்டத்திலேயே வாழ்ந்து இறக்கும் வரை துன்பமே வரமாக பெறுவார்கள். இவர்களுக்கு இந்த திரிகோண ஸ்தானங்கள் மற்றும் முழு சுபர் குரு பெரும் பாதிப்புடன் இருக்கும்.  இந்த பாதிப்பு உள்ளவர்கள்,  குலசாமி மற்றும் முன்னோர்கள் (5,9) ஆசீர்வாதம் இருக்காது.

ஐந்தாம் பாவம் முக்கியமானது. இது குழந்தையை குறிக்கும் பாவமாகும். நம் வாழ்வின் அடுத்த தலைமுறை என்பது முக்கியமல்லவா? அவரவருக்கு குழந்தை பாக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இதுவும் ஒருவகை டிஎன்ஏ எனப்படும் மரபுடன் தொடர்பு பெற்றுள்ளது. இந்த பாவத்தில் சுபர் குருவோ அல்லது பாவிகள் அமர்ந்தால், வலுத்த பாதகாதிபதிகள் தொடர்பு பெற்றால், 5ம்   பாவத்தின் அதிபதி மறைந்திருந்தால்  குழந்தைப்பேறு கட்டாயம் கிடைக்காது.  இதுதவிர  பூர்வ புண்ணியம் மற்றும் பாக்கியாதிபதி லக்கினத்தோடு தொடர்புடன் வலுவுடன் இருக்கவேண்டும். அவற்றில்  ஐந்தாமிடத்தில் குரு இருப்பது புத்திர தோஷம் என்று ஒரு விதி இருந்தாலும், ஜெனன   ஜாதகத்தில் ஐந்தில் உள்ள குரு புத்திர தோஷம் தந்தாலும் மற்ற நற்காரியங்களை செய்ய வல்லவர். அதேபோல் ஒன்பதாம் இடத்தில் குரு இருந்தால் சற்புத்திர யோகம் உண்டு என்பது மற்றொரு விதி. ஒன்பதாம் இடத்தில உள்ள குரு பகவான் தன்னுடைய ஒன்பதாம் பார்வையால் 5ம் வீட்டை பார்த்து சற்புத்திர வாய்ப்பை தரவல்லவர்.

திரிகோணாதிபதிகள் மற்றும் கர்மக்காரகனை வைத்து யாருடைய சாபத்தை பெற்றிருக்கிறார் என்பது நன்றாக தெரியும். அதே சாபம் தொடராமல் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு அந்த கர்மாவின்  வைப்பு நிதியை தொடர விடக் கூடாது.    முக்கியமாக தம்பதியர் இருவருக்கும்  பித்ரு சாபம்,  பெண் சாபம் மற்றும் மற்ற பல்வேறு தோஷங்கள் 1,5,9 தொடர்பு பெற்றால் குழந்தை அறவே கிட்டாது. இந்த ஜாதகர் இந்தப் பிறவியிலும் அதே சாபத்தை பெறுமாறு கர்மகாரகன் மற்றும் அவயோகர்கள்  அந்த ஜாதகரை  தூண்டுவார்கள்.   எடுத்துக் காட்டாக  ஒருவருக்கு பெண் சாபம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர்  இப்பிறவியிலும் தாயை மதிக்காதவனாக,  பெண் இனத்தை இழிவுபடுத்துபவனாக, சகோதர, சகோதரிகளுக்கு வேண்டிய நேரத்தில் உதவாதவனாக, மனைவியை மனதால் மற்றும் உடலால் துன்பப்படுத்துபவனாக, பெண்  விஷயத்தில் ராட்ச குணவானாக  இருப்பான். 

முதலில் ஜாதகர் இதை  உணர்ந்து, இந்தப் பாவ செயல்களை இப்பிறவியில் செய்யாதவனாக இருக்க வேண்டும். அதற்கேற்ப சாபம் விடுபடும்படி பரிகாரமாக உதவினால், நம்மை தொடரும் கெட்ட கர்மா கூட்டுத் தொகை சிறிதளவு குறைக்கப்படும்.

பிறப்பு முதல் இறப்பு வரை நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த பிரபஞ்ச சக்தி பஞ்சபூத தத்துவத்தில் (நீர் , நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம்) அடங்கும். நம்முடைய நோக்கம் அதை சார்ந்த செயல் அனைத்தும் திரிகோண அதிபதிகள் முடிவு செய்வார்கள்.  எடுத்துக்காட்டாக 1,5,9 காலபுருஷ தத்துவப்படி நெருப்பு சார்ந்து அமையும். அதற்கேற்ப அவர்களின் கர்மா மற்றும் தெய்வங்கள் அடங்குவார்கள்.

மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ 
 டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. 

பஞ்ச பூதங்கள் தன்மை கொண்ட பஞ்ச கர்த்தாக்களையும் (ஐந்து மூர்த்திகள்: பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்) மற்றும் பஞ்ச சக்திகளையும் (பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, க்ரியா சக்தி) மந்திரங்களோடு ஜபித்தால் அனைத்து சக்தியும் கிட்டும். பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா கூறுகிறார்-“இந்தப் பேரண்டம் முழுவதும் பஞ்ச பூதங்களால் ஆனது.

குருவே சரணம்!
 

ஜோதிட சிரோன்மணி  தேவி 
Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

Tags : JADHAGAM planet lucky jodhidam dhosham
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT