கட்டுரைகள்

இந்த ராசிக்காரருக்கு எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படும்: ஆகஸ்ட் மாத பலன்கள்

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

12 ராசி அன்பர்களுக்கும் ஆகஸ்ட் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

•••


மேஷம் 
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தலைமை தாங்கும் பண்பை இயற்கையிலேயே பெற்ற மேஷ ராசியினரே இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். 

குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். 
கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.  கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும்.
அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 
மாணவர்களுக்கு: மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். 

அஸ்வினி:
இந்த மாதம் சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். 

பரணி:
இந்த மாதம் எதிலும் வேகம் காணப்படும்.  எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.  

கார்த்திகை:
இந்த மாதம் இடமாற்றத்துடன்  பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.  

பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி 
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

***

ரிஷபம் 
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
வெள்ளை மனதுடன் அனைவரிடமும் பழகும் ரிஷபராசியினரே இந்த மாதம் பல நல்ல பலன்களை பெற முடியும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  
பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.
கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

கார்த்திகை:
இந்த மாதம் எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். 

ரோகினி:
இந்த மாதம் காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில்  நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். காரியத்தை நிறைவேற்ற  தேவையான மனோ பலம் உண்டாகும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.

பரிகாரம்:  வெள்ளி அன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

***

மிதுனம் 
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காத மிதுன ராசியினரே இந்த மாதம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.
பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். 

அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட  மாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது.

புனர்பூசம்:
இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். 

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

***

கடகம் 
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கடக ராசியினரே நீங்கள் குடும்பத்தினரை நேசிப்பவர்கள். இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.
தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.
பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். 
அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். 

பூசம்:
இந்த மாதம் புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை  கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசுவதால்   வருத்தங்கள் நீங்கும்.  பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். 

ஆயில்யம்:
இந்த மாதம் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். 

பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

***

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்வில் சாதனைகள் புரியும் சிம்ம ராசியினரே நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள்.  இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பொருளாதாரம் மேலோங்கும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.
பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். 
அரசியல்துறையினருக்கு ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

மகம்:
இந்த மாதம் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். அக்கம்பக்கத்தாரிடம் கவனமுடன் இருப்பது அவசியம். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

பூரம்:
இந்த மாதம் வாகனங்களில் செல்லும் போது  கவனம் தேவை. அடுத்தவருடன்  பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது.  

உத்திரம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து  செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம். 

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சூரியன், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

***

கன்னி 
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
உழைப்பினால் வாழ்வில் வளம் பெறும் கன்னி ராசியினரே நீங்கள் உணவிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். 

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களின் ஆலோசனை கேட்டு எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே  இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். 
அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

உத்திரம்:
இந்த மாதம் மனக்கவலை உண்டாகும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும். 

ஹஸ்தம்:
இந்த மாதம் மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். 

சித்திரை:
இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான  பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும்.

பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22

***

துலாம் 
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எப்போதும் தர்ம சிந்தனையுடன் காணப்படும் துலா ராசியினரே நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் அஷ்டமஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சியாக இருப்பது நல்ல பலன்களைத் தரும். ராசியை சூரியன் பார்க்கிறார். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். 

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. 

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

சித்திரை:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள்.  சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை  விரைவாக செய்து முடிப்பீர்கள்.

ஸ்வாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர்  அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.  பிள்ளைகள்  மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான  பேசி பொழுதை கழிப்பீர்கள்.

விசாகம்:
இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் மேன்மை உண்டாகும். 

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

***

விருச்சிகம் 
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தனது நேர்மையால் வாழ்வில் வெற்றி பெறும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.
பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். 
மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

விசாகம்:
இந்த மாதம் ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.

அனுஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். 

கேட்டை:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

***

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ)  - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தனக்கு கிடைத்திருக்கும் தெய்வீக அருளை அனைவருக்கும் தர விருப்பப்படும் தனுசு ராசியினரே நீங்கள் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். இந்த மாதம் அனைத்து கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.
பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.
கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். 
அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

மூலம்:
இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எடுக்க  ஆர்வம் காட்டுவீர்கள். 

பூராடம்:
இந்த மாதம் பயணங்களால் நன்மை உண்டாகும். ஆதாயம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம்  காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். 

உத்திராடம்:
இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.

பரிகாரம்: நவக்கிரஹ குருவை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29

***

மகரம் 
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் மகர ராசியினரே இந்த மாதம் ராசியில் சுகாதிபதி செவ்வாய் உச்சமாக இருக்கிறார். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். சுக்கிரனின் சுகஸ்தான சஞ்சாரம் நல்ல பலன்களை தரும்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.
அரசியல்துறையினருக்கு பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

உத்திராடம்:
இந்த மாதம் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். தொழிலை விரிவுபடுத்த அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.

திருவோணம்:
இந்த மாதம் திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அவிட்டம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்: வினாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்;  
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30, 31

***

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
அனைவருக்கும் ஏணியாக இருந்து ஏற்றி விடும் திறன் கொண்ட கும்ப ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம்.
தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.
குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.
பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.
அரசியல்துறையினருக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

அவிட்டம்:
இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். 

சதயம்:
இந்த மாதம் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது.  கவனத்தை சிதறவிடாமல்  உங்களது வேலைகளை சரிவர செய்வது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  

பூரட்டாதி:
இந்த மாதம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.  உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.


பரிகாரம்: சனிக்கிழமையில் முன்னோர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

***

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நட்பினை உயிரை விட மதிக்கும் மீன ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. 

தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். 

அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பூரட்டாதி:
இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள்  மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.

ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.  கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான  ஆடை அணிகலன்களை  வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT