கட்டுரைகள்

இந்த ராசிக்காரர் குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்: வாரப்பலன்கள்

17th Jul 2021 04:06 PM | ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர்

ADVERTISEMENT

 

மேஷம்

ஜூலை 16 முதல் 22 வரை

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

ADVERTISEMENT

எதிர்பாராத தனவரவு உண்டாகும். நிலம், வீடு மற்றும் வீட்டு மனைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம், கவனம் தேவை. சமூகத்தில் உயர்ந்தவர்களின் சந்திப்பு நிகழும். 

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய மாற்றங்கள் நிகழும். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் பொறுமையுடன் வாடிக்கையாளர்களைக் கையாளுவீர்கள். நேரடியாகவே வியாபாரத்தைக் கவனித்தால் நஷ்டம் வராது. விவசாயிகளுக்கு வருமானம் சற்று குறைந்து காணப்பட்டாலும் கால்நடைகளால் நன்மை உண்டாகும். கால்நடைகளை நன்கு பராமரிக்கவும். 

அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை அதிகம் சந்திப்பீர்கள். வாக்குவாதங்களும் அதிகரிக்கும். கலைத்துறையினர் பெயரும் புகழும் பெற புதிய சாதனைகளைச் செய்வீர்கள். ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபடுவீர்கள். கணவருடன் பரஸ்பரம் அன்பு மேலோங்கும். மாணவமணிகள் நண்பர்களுடன் ஊர் சுற்றாமல் ஆக்கபூர்வமான சிந்தனையில் ஈடுபடவும். ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: 20, 21.

•••


ரிஷபம்

ஜூலை 16 முதல் 22 வரை

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம். உறவினர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவும். 

உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். கடுமையாக உழைத்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகள் காலதாமதம் ஏற்பட்டாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் உங்களைத் தேடி வருமாறு நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் கூலித்தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். குத்தகை விஷயங்களில் போட்டிகளைச் சந்திப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். நினைத்த காரியங்களை வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைய நிறைய உழைக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள், பெற்றோரின் அறிவுரைகளைப் பின்பற்றுவீர்கள்.

பரிகாரம்: குருவாயூரப்பனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 18. 

சந்திராஷ்டமம்: 22.

•••

மிதுனம்

ஜூலை 16 முதல் 22 வரை

(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். செய்தொழிலில் விருத்தி அடைவீர்கள். உங்களின் அறிவாற்றலும் திறமையும் வெளிப்படும். துணிச்சலான காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை சற்றே உயரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உங்களுக்கு பெயரும், புகழும் உண்டாகும். வியாபாரிகள் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். கொடுக்கல், வாங்கல் முதலான விஷயங்களில் லாபம் ஏற்படும். விவசாயிகளுக்கு சோர்வு, சலிப்பு நீங்கி மன உற்சாகம் பெருகும். விவசாயத்தில் அபிவிருத்தி காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பொருள் திரட்டுவதில் அதிக ஆர்வம் கூடும். உயர் பொறுப்புகளும் உங்களை வந்தடையும். கலைத்துறையினர் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி குறையும். அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற வம்புகளைத் தவிர்க்க பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. தெய்வ காரியங்களில் ஈடுபாடு கூடும். மாணவமணிகளுக்கு சுய பலம் அதிகமாகும். அலைச்சலைத் தவிர்த்து அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

கடகம்

ஜூலை 16 முதல் 22 வரை

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பல வழியிலும் ஆதாயம் கிடைக்கும். சுற்றியிருப்பவர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். நல்லவர்களின் துணை கிடைக்கும். தெய்வீகப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் சற்று தடைபடும். மனத் துணிவைக் கூட்டிக் கொள்ளுங்கள். தொழில் முன்னேற்றத்திற்காக செலவு செய்ய வேண்டிவரும். விவசாயிகளுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். பொருள் வரவு கூடும். கால்நடைகளை நன்கு பராமரிக்க வேண்டும். 

அரசியல்வாதிகளுக்கு பொதுநல முன்னேற்றப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை ஏற்படும். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ற பலன் கிடைக்கும். பெண்மணிகளுக்கு இல்லத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். 
மாணவமணிகள் வெளிநாட்டுத் தொடர்பான மேற்படிப்பிற்கு முயற்சி செய்வீர்கள். பல தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 17, 18. சந்திராஷ்டமம்: இல்லை.

•••

சிம்மம்

ஜூலை 16 முதல் 22 வரை

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். உடல்நலம் சற்று கவனிக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் துறையில் வளர்ச்சி காண்பார்கள். நிர்வாகத்துறையில் இருப்போருக்கு வரவேற்பு கூடும். வியாபாரிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறைகள் லாபகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான திட்டங்கள் கைகூடும். விவசாயிகள் எடுத்த காரியங்களில் எல்லாம் ஆதாயம் அடைவீர்கள். எண்ணங்கள் ஈடேறும். மகசூல் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நல்ல காலம் கை கூடும் நேரமிது. வீண் பயமும், கலக்கமும் நீங்கி மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பெண்மணிகளுடைய பராக்கிரமம் வெளிப்படும். கணவரால் அனுகூலம் உண்டாகும். மாணவமணிகள் முன்னேற்றம் காண நீங்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: மஹாவிஷ்ணுவை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

கன்னி

ஜூலை 16 முதல் 22 வரை

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உழைப்பு அதிகரித்தாலும் முழுமையான பலன் கிடைக்காது. செலவுகள் அதிகரிக்கும். தந்தை நலனில் அக்கறை தேவை. தாய்வழி உறவினர்களால் சிறு பிரச்னைகள் தலைதூக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.  

உத்தியோகஸ்தர்களில் இயந்திரப் பணியாளர்களுக்கு ஆதாயமுண்டு. உழைப்பு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களால் சிறு பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். வியாபாரிகள் லாபம் ஈட்டும் காலம் இது. 

தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். விவசாயிகளுக்கு சுபிட்சம் கூடும். அரசு வகையில் எதிர்பார்த்திருந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். 

அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகும். அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். மேலிடத்தின் கவனம் உங்கள் மீது இருக்கும். கலைத்துறையினர் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய பொருள் சேரும். பெண்மணிகள் மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெரியோர்களால் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். பயணங்களின் போது கவனமுடன் இருக்கவும்.

பரிகாரம்: நவகிரகங்களை வழிபட்டு வரவும். அனு
கூலமான தினங்கள்: 19, 20. சந்திராஷ்டமம்: இல்லை.

•••

துலாம்

ஜூலை 16 முதல் 22 வரை

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)


பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனமும், சாது  தரிசனமும் கிடைக்க வேண்டி மனதில் தியானிப்பீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடி வரும். பண வரவு திருப்தி தரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. சிறு விபத்துகளைத் தவிர்க்க கவனம் தேவை. பணிகளில் ஆக்கமும் மேன்மையும் உண்டாகும். வியாபாரிகள் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். கூட்டுத் தொழில் வாபம் தரும். பண வரவு திருப்தி தரும். விவசாயிகளுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நீர் வரத்து அதிகரிப்பதால் மகசூல் பெருகும். 

அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். மேலிடத்தின் ஆதரவும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய சொத்துகள் சேரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது  நல்லது. பெண்மணிகளுக்கு எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். 

ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். தந்தையின் உடல்நிலையில் சற்று மாற்றம் இருக்கும். மாணவமணிகள் போட்டிப் பந்தயங்களில் பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். 
சிலருக்கு அயல்நாடு சென்று படிக்கும் யோகம் உண்டாகும். 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

விருச்சிகம்

ஜூலை 16 முதல் 22 வரை

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கற்பனை ஆற்றல் கூடும். மனதில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் கூடும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் இயந்திரங்களில் பணி புரிபவர்கள் பாதுகாப்புடன் செயல்படுவது நல்லது. வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை ஏற்படும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் பெருகும். வெளி வட்டாரப் பழக்கம் பயன்படும். வீண் செலவுகளைத் தவிர்த்திடுங்கள். 

அரசியல்வாதிகளுக்கு நற்பணியில் ஈடுபாடு கூடும். நல்லவர்களது நட்புறவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். வெளிநாட்டு நிகழ்ச்சிகளின் பயணங்கள் ரத்தானதால் சற்று வருமானம் குறையும்.  பெண்மணிகளுக்கு நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன் பிறந்தவர்களின் உதவியும், அன்பும் கிட்டும். மாணவ
மணிகளுக்கு கற்பனை வளம் கூடும்.  படிக்கும் போது ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள விடியற்காலையில் எழுந்து பாடங்களைப் படிக்கவும். 

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

தனுசு

ஜூலை 16 முதல் 22 வரை

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் நலம் பல உண்டாகும். நிர்வாகத்துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும். வழக்கில் வெற்றி கிட்டும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைகளைத் தாண்டி வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். தான, தர்ம பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்கள் பலரும் உதவுவார்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். கால்நடைகளால் நல்ல பலன் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் முயற்சிகள் வெற்றி பெறும். இனிய பயணங்களை பாதுகாப்புடன் மேற்கொள்வீர்கள். பெண்மணிகள்  உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகளைப் பெற்று செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

மகரம்

ஜூலை 16 முதல் 22 வரை

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)


வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் கேட்பீர்கள். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்திலும் உங்கள் கடமைகளைச் சரி வர ஆற்றுவீர்கள். உங்களின் நல்ல எண்ணங்களைச் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்வார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவிற்கு எந்தத் தடையும் இருக்காது. மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளிடம் கூட்டாளிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கடும் போட்டிகள் நிலவும். சமாளியுங்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைப் பெற்று நல்ல லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைகளைத் திறம்பட முடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். சக கலைஞர்
களிடம் நட்புடன் பழகுவீர்கள். பெண்மணிகள் உற்றார், உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். கணவர் வீட்டாருடன் சற்று மனஸ்தாபம் ஏற்படும். மாணவமணிகள் வீண் வம்பு, பழிச் சண்டைகளை வாங்கி வந்து பெற்றோரையும் மனச் சங்கடத்தில் ஆழ்த்துவீர்கள். சற்று விவேகமாக நடந்து கொள்ளவும். 

பரிகாரம்: ஸ்ரீஹயக்கிரீவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

 

•••


கும்பம்

ஜூலை 16 முதல் 22 வரை

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)


சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் உங்கள் செயல்களை மாற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மனதிலும், உடலிலும் உற்சாகம் குறையும். சகோதர, சகோதரிகளிடம் பரஸ்பரம் அன்பு நீடிக்கும். . 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்திலும் ஒரே கலகம், குழப்பம் ஏற்படும். எனவே, நாவடக்கம் அவசியம். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழில் கூடாது. எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான பராமரிப்புச் செலவு கூடினாலும் நல்ல லாபத்தையும் பார்ப்பீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். பயணங்களினால் நன்மை ஏற்படாது. தவிர்த்திடுங்கள். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பீர்கள். கிடைக்கும் ஒப்பந்தங்களை ஒப்புக் கொண்டு நற்பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருப்பீர்கள். பெண்மணிகள் உறவினர்களைச் சற்று அரவணைத்து செல்லுங்கள். கணவருடன் வாக்குவாதம் செய்வதை விட்டு விட்டு, சுமூகமாகப் பேசி பிரச்னைகளை தீர்த்து விடுங்கள். மாணவமணிகள் வெளிநாடு சென்று படிப்பதற்கு முயற்சி செய்வது பலனளிக்கும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 21. 

சந்திராஷ்டமம்: 16, 17.

•••

மீனம்

ஜூலை 16 முதல் 22 வரை

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் காரியங்களை எப்பாடு பட்டேனும் முடித்து விடுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் எந்த உதவியும் கிடைக்காது. பொருளாதாரம் மேம்படும். வாகன யோகம் உண்டாகும். 


உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சற்றுத் திட்டமிட்டுச் செய்து முடிக்கவும். வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரம் செய்யாதீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி வியாபாரம் செய்யுங்கள். விவசாயிகள் தானிய விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். இருப்பினும் உடலில் சற்று அசதி ஏற்பட்டு விவசாய வேலைகளில் சற்று தொய்வு ஏற்படும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மேலிடம் இட்ட பணிகளை தொண்டர்களின் உதவியோடு முடித்து வரவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையாக, அன்பாக நடந்து கொள்வீர்கள். மழலைச் செல்வம் இட்ட கட்டளையை உடனடியாக நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம், பிராணாயாமம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுங்கள்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம். 

அனுகூலமான தினங்கள்: 17, 21. 

சந்திராஷ்டமம்: 18, 19.
 

Tags : prediction weekly prediction jadhagam jodhidam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT