புதன்கிழமை 26 ஜூன் 2019

இறைவன் நமக்குள்ளே இருந்தும் காணவிடாது நம்மை தடுப்பது இதுதான்!

Published: 15th May 2019 05:30 PM

 

நமக்குள்ளே நமது ஆசையினால் தோன்றும் ஏழு மாயைகள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. அவை என்னென்ன?

  1. காமம் – ஆசை.
  2. குரோதம்- ஆசையால் பகை.
  3. மோகம் – ஆசையால் உருகுதல்.
  4. லோபம் – ஆசை பேராசையாகுதல்.
  5. மதம் – ஆசை விடாபிடியாகி திமிராகுதல்.
  6. மாட்சரியம் – ஆசைப்பட்டதை அடைந்தே தீருவேன் என்பது.
  7. பயம் – மேற்கண்ட விசயங்களில் மாட்டி , குழம்பி, பயந்து கடைசியில் தன்னிலையை இழத்தல்.

நோய் தீர்க்க கடைக்குச் சென்று மருந்து வாங்கினால் மட்டும் போதாது. அதை உண்டால்தான் நோய் தீரும். போலவே இறைவனை வணங்க கோயில்களுக்குச் சென்றால் மட்டும் போதாது. இருந்த இடத்திலிருந்தே கூட மனதார வேண்டிக் கொண்டால் போதும். அவரை வேண்டி நின்றால் பேராசை என்ற நோய் நீங்கும்.

இறைவனை தரிசிக்க தீவிரமான பக்தியும், தன் முனைப்பும், சுயநலமற்ற விழைதலும், பிறர் நலன் யோசித்தலும், தன்னைத் தான் நேசித்தலும் தேவை.

ஆடியில் தெரிகின்ற பிம்பங்கள் அதன் உள்ளீட்டை மாற்றுவதில்லை. கத்தியை கண்ணாடி முன் வைத்தால் அது கீறல் விழாது. போலவே இவ்வுலகிலுள்ள தீமைகள் ஒருபோதும் ஞானம் அடைந்தவர்களின் மனதை கெடுப்பதில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : god prayers self 7 senses ஏழு மாயை மாயை ஆசை

More from the section

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் வணங்கவேண்டிய எண்கண் முருகன்!
பொன்னவனால் (குரு) ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இவர்கள்!
குருவருளும் திருவருளும் பெற அழகிய மணவாளம் வாங்க!
திருநங்கையாகப் பிறப்பதற்கு ஜோதிட ரீதியாக சொல்லப்படும் காரணம்!
தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் எங்கு இழுக்கப்பட்டது தெரியுமா?