ஆன்மிகம்

கே.சி.எஸ்.ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

13th Nov 2020 04:58 PM

ADVERTISEMENT

 

2020-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடையுங்கள். 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில் அசையா சொத்துகளை விற்று உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். செய்தொழிலை நல்ல முறையில் லாபத்துடன் நடத்துவீர்கள். பொருளாதார நிலைமை மேன்மையாக இருக்கும். சமூகத்தில் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும்.  

ADVERTISEMENT

அனைத்து முடிவுகளையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து எடுக்கவும். வெளியில் கொடுத்திருந்த பணத்தை கறாராக வசூலிக்கவும். அதே நேரம் எவருக்கும் கடன் கொடுப்பதோ அல்லது உங்கள் பெயரில் பணம் வாங்கி கொள்வதோ கூடாது.   

06.04.2021 முதல் 13.09 2021 வரை உள்ள கால கட்டத்தில் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகள் நீங்கள் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள். முன்னர் காணாமல் போன பொருள்களும், ஆவணங்களும் திரும்பக் கிடைக்கும். 

உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கேட்ட உதவிகளைச் செய்வார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். செய்தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். சில சலுகைகளை அறிவித்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். அரசு வழியில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில்  செய்தொழில் சீராக நடக்கும். சிக்கலான சவாலான காரியங்களை கையிலெடுக்க வேண்டாம். நீண்ட நாளாக பார்க்க நினைத்திருந்தவரை சந்திப்பீர்கள். அவரின் மூலம் வாழ்வில் முக்கிய திருப்பமும், அதிர்ஷ்ட வாய்ப்பும் உண்டாகும்.  

தக்க சமயத்தில் உங்கள் சமயோஜித புத்தி கை கொடுக்கும். நெடுநாளாக திருமணமாகாதவர்களுக்கு திருமணமும், குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும். புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும் காலகட்டமிது. 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். உங்கள் மீது தொடரப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். இதனால் தாமதப்பட்டிருந்த உயர் பதவிகளும், ஊதிய உயர்வும் வந்து சேரும். அதே நேரம் உங்கள் வேலைகளை கவனம் சிதறாமல் பட்டியலிட்டு செய்து முடிக்கவும். உழைப்பதற்கு அஞ்சக் கூடாது. 

வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். அதே நேரம் அந்நியர்களுக்கு கடன் கொடுத்து வியாபாரம் செய்ய வேண்டாம். கூட்டாளிகளுடன் வரவு செலவு கணக்குகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளவும். 

விவசாயிகள் விளை பொருள்களால் லாபமடைவீர்கள். நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் நன்மையளிக்கும். அதே சமயம் வயல் வரப்புச் சண்டைகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் ஒன்றிரண்டு சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கட்சி மேலிடம் உங்களுக்கு புதிய பதவிகளை அளிக்கும். இதனால் பொறுப்புகள் கூடும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெயரும் மரியாதையும் சமூகத்தில் உயரும். இதனால் பண வரவுகள், வண்டி, வாகனச் சேர்க்கையும் உண்டாகும்.

பெண்மணிகளுக்கு இனம் புரியாத குழப்பங்கள் இருந்தாலும் உங்கள் வேலைகளில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்வீர்கள். இதனால் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

மாணவமணிகள் வருங்காலத்திற்காகச் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். மனதை ஒரு நிலைப்படுத்த பிராணாயாமம், யோகா போன்றவைகளைச் செய்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். 

பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும்.

******

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் நன்றாக சூடுபிடிக்கும். மனதிலிருந்த குழப்பமும் பயமும் நீங்கி தெளிவும் மகிழ்ச்சியும் நிறையும். பெயர், புகழ் அனைத்தும் கொடி கட்டிப் பறக்கும். எதிர்

பாராமல் பல நல்ல தகவல்கள் வந்து சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். சிக்கன குணம் மாறி, தாராள மனப்போக்கு உண்டாகும். மனிதாபிமானம் கூடும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும்.  புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் நல்லபடியாகப் பூர்த்தியடையும். உடல் நலம், மனவளம் இரண்டும் சீராகவே இருக்கும் காலகட்டமிது.

06.04.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் திட்டமிட்ட பாகப்பிரிவினை சுமூகமாக நடந்தேறும். நிலைமைக்குத் தகுந்தவாறு பேசி சூழலை சகஜமாக்கி விடுவீர்கள்.
குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள், பெற்றோர் ஆதரவு நிரம்பக் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தர்மகாரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். 

கடினமான விஷயங்களையும் சுலபமாகச் செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் பேச்சில் நிதானமும், முகத்தில் வசீகரமும், நடையில் மிடுக்கும் உண்டாகும். 
14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் பெற்றோருடன் இணக்கம், ஆதரவு கூடும். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ், கெüரவம் கூடும். "முக்கியமானவர்' என்று புகழப்படுவீர்கள். பணம் தானாகவே வந்து குவியும். நேர்முக, மறைமுக எதிரிகள் தாமாகவே விலகி விடுவார்கள். 

சுறுசுறுப்புடன் கவனமாக உழைப்பீர்கள். நெடுநாளாக வராது என்று நினைத்திருந்த தொகை மறுபடியும் கை வந்து சேரும். உங்கள் ரகசியங்களை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு வசதியான வீட்டிற்கு மாறும் யோகமும் உண்டு. 

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவீர்கள். அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வருமானம் நன்றாகவே இருக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளை கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைவீர்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் விற்பனை லாபம் சீராக இராது. இடைத்தரகர்களும் உங்களின் லாபத்தைப் பங்கு போட காத்திருப்பார்கள். சிலருக்கு பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளையும் திருப்பிச் செலுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளைப் பொருத்தவரை பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடனும், திடமான முயற்சிகளுடனும் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 

கலைத்துறையினருக்கு  சரளமான பண வசதிகள் கிடைக்கும். உங்களின் திறமைகளினால் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். பெயர், புகழ் உயரக் காண்பீர்கள். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிலருக்கு விருதுகளும் கிடைக்கும். 

பெண்மணிகள் இந்தக் காலகட்டம் முழுவதும் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பார்கள். கணவரிடம் இணக்கமாகவும் இருப்பீர்கள். கணவருடன் கூடி குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். 
மாணவமணிகள் தங்களின் விடா முயற்சியால் வெற்றி அடைவார்கள். உங்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய பெற்றோர்கள் முன் வருவார்கள். ஆசிரியர்களும் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். 

பரிகாரம்:  விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

******
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருக்கும் போட்டி பொறாமைகளை கவனித்து எதிர்கொள்வீர்கள். நேர்முக, மறைமுக எதிரிகளைச் சமாளித்து சுலபமாக வெற்றி பெறுவீர்கள். உடலில் இருந்த நோய் நொடிகளும் தீர்ந்துவிடும். சிறிய முதல் போட்டு பெரிதாகத் தொழிலை நடத்தி லாபம் பெறுவீர்கள்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களின் கீழ் வேலை செய்வர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். 

06.04.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். வழக்கு வியாஜ்யங்களில் சிறிது தாமதம் ஏற்பட்டு வெற்றி உண்டாகும். குடும்பத்தில் பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் ஒன்று வாயிற்கதவைத் தட்டும். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ்  மேம்படும்.

14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் உற்றார் உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கி சுமூகமான உறவு உண்டாகும். சிக்கனமாக இருந்து சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மனதில் உள்ள குழப்பங்களைத் தவிர்க்க தனிமையில் இறைவன் நாமத்தை ஜபிப்பீர்கள். மற்றபடி உங்களின் நம்பகத் தன்மை உயரும். நண்பர்கள் உங்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். உங்கள் செயல்களில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் எப்படியும் சமாளித்து முடித்துக் காட்டுவீர்கள். அவ்வப்போது சிறிய தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதை வறுத்திக் கொண்டிருந்த பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலை நிலவும். மேலதிகாரிகளின் ஆதரவு கூடும். வேலையில் சில குழப்பங்கள் நிலவினாலும் சமாளித்துவிடுவீர்கள். பண வரவு சீராக இருக்கும். சக ஊழியர்களிடம் சற்று கவனம் தேவை. 

வியாபாரிகள் அதிகமாக உழைத்து முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் சிலரது தலையீடுகள் அவ்வப்போது இருந்தாலும் உங்கள் காரியங்களை திறமையாக முடித்துவிடுவீர்கள். பணப் புழக்கம் தாராளமாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக அமையும். இந்தக் காலகட்டத்தில் புதிய தொழிலை துவக்குவீர்கள். இதனால் உங்கள் மதிப்பு, செல்வாக்கு உயரும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் லாபம் பெருகும். நெருங்கியவர்களுக்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கெüரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். சிந்தனையில் தெளிவும், செயலில் வீரியமும் காணப்படும். புதிய நிலங்களை கடன் பெற்று வாங்குவீர்கள். நல்ல திறமையான ஆட்களை வைத்து வேலை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளின் பிரச்னைகள் சற்று குறையும். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், உங்களுக்கு ஆதரவு தருவார்கள். தெளிவான மனதோடு கட்சிப் பணி ஆற்றுவீர்கள். திருப்பங்கள் உண்டாகும். 
பயணங்களை மேற்கொள்வீர்கள். உள்கட்சி விவகாரங்களில் அனாவசியமாகத்  தலையிட வேண்டாம். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளில் சுமூகமான தீர்ப்பு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத வருவாய் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து, இடைவிடாமல் உழைத்து சாசகங்களைச் செய்வீர்கள். உங்கள் திறமை பளிச்சிடும். பண வரவு தாராளமாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.  

பெண்மணிகளுக்கு இருந்து வந்த அனைத்து சங்கடங்களும் தீரத் தொடங்கும். குடும்பத்தில் சற்று நிம்மதி மேலோங்கும். பெரியோர்களின் ஆசியுடன் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். முன்பு காணாமல் போனதாக நினைத்துக் கொண்டிருந்த பொருள் வீட்டிலிருந்தே  அகப்படும். தேக ஆரோக்கியம் மேன்மையடையும்.

மாணவமணிகள் வம்புகளிலும், வீண் பேச்சுகளிலும் கலந்து கொள்ளாமல் புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துக் கொள்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

******

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில் ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் உங்கள் முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். மற்றபடி உங்கள் பெருமை, புகழ், செல்வாக்கு எல்லாம் பிரமாதமாக உயரத் தொடங்கும். பெரிய இடத்து  நட்பு கிடைக்கும். தாமதமாகி வந்த திருமணங்கள் சட்டென்று நடந்தேறும். வீடு, நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்க எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும்.  மற்றபடி செய்யும் செயல்களில் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். குடும்பத்தில் மழலை பாக்கியமும் உண்டாகும். வம்பு வழக்குகளில் எதிர்பார்த்த "வாய்தா' கிடைக்கும்.

06.04.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களைச் சார்ந்தவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்கள். வெளித் தோற்றத்தில் தைரியமானவராகக் காட்சி அளித்தாலும் மனதுக்குள் காரணம் புரியாத பயம் இருந்து கொண்டிருக்கும்.  சிலர் விடாப்பிடியாக முயன்று புது வீட்டை வாங்கிக் குடி புகுவார்கள். நெடுநாளாக நினைத்துக் கொண்டிருந்த செயல் ஒன்று திருப்தியாகப் பூர்த்தியாகும். உங்கள் செயல்களில் அவசர புத்தியைக் காட்டாமல் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். 

14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் வசதி வாய்ப்புகளைக் கூட்டி கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தில் சுமூகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்கள் பங்கின் மூலம் வருமானம் வரத் தொடங்கும். சிலர் குடும்பத்துடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளிலும் வெற்றி உண்டாகும். விரும்பிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து வாசல் கதவைத் தட்டும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு சற்று கூடத் தொடங்கும்.அதே நேரம் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. உங்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் நிதானத்துடன் ஆற்றி வர சரிவுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். கூட்டாளிகளுடன் மனத் தாங்கல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி வருமானம் சிறப்பாகவே தொடரும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்து ஈடுபடுங்கள். 

விவசாயிகளுக்கு விவசாயம் சிறப்பாக நடைபெறும். விளைச்சல் சற்று சுமாராகவே இருக்கும். புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். சக விவசாயிகளின் போட்டி, பொறாமைகள் உங்கள் முயற்சிகளைச் சிதைக்காது. புதிய குத்தகை வாய்ப்புகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். கடன்கள் வாங்கும் நிலை உண்டாகாது. கால்நடைகளாலும் பலன் அடைவீர்கள். அரசு மானியங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் பொதுத் தொண்டில் சிறு சிக்கல்களும், தடங்கல்களும் உருவான போதிலும், இறுதியில் வெற்றி பெறுவீர்கள். போட்டி, பொறாமைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கட்சி மேலிடத்தின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவது அவசியமாகும். நேர்மையான முறையில் காரியங்களை ஆற்றுங்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையினரைப் பொருத்தவரை உற்சாகமான சூழ்நிலை அமையும் காலமிது. புகழையும், பணத்தையும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். துறையில் போட்டி, பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகளையும் தேடிப் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். கணவருடன் பாசத்தோடு பழகுவார்கள். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையைக் குறைக்கும்.

மாணவமணிகள்: கல்வியிலும், விளையாட்டிலும் நல்ல பலனைக் காண்பார்கள். ஆசிரியர்களின் நேசத்தைப் பெறுவார்கள். படிப்பில் முழுமை அடைய உடற்பயிற்சிகளையும், யோகா, பிராணாயாமம் போன்றவற்றையும் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.


இதையும் படிக்கலாம்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்களுக்கான குருப் பெயர்ச்சி பலன்கள்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT