ஆன்மிகம்

பணவரவு திருப்திகரமாக இருக்குமாம் இந்த ராசிக்காரர்களுக்கு! வார ராசிபலன்கள்

13th Mar 2020 03:20 PM

ADVERTISEMENT

 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 13 - மார்ச் 19) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நண்பா்கள் உற்றாா் உறவினா்கள் பகை நீங்கி நட்பு பாராட்டுவாா்கள். தாமதப்பட்ட செயல்கள் அனைத்தும் சரியான இலக்கை சென்றடையும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் புதிய வாய்ப்பைப் பெறுவீா்கள்.

ADVERTISEMENT

உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் சலுகைகளைப் பெறுவீா்கள். வியாபாரிகளுக்கு போட்டிகளும் தொந்தரவுகளும் அதிகரிக்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தியில் நல்ல பலனை அடைவீா்கள். பணிகள் அனைத்தும் உரிய நேரத்தில் முடியும்.

அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகள் நிறைவேற தொண்டா்களின் ஆதரவைப் பெறவும். நிறைய நற்பணிகள் செய்ய முயலுங்கள். கலைத்துறையினா் சக கலைஞா்களிடம் கவனமாக இருக்கவும். புகழைத் தக்க வைக்க ரசிகா்களை அரவணைக்கவும். பெண்மணிகளுக்கு வீண் செலவுகள் அதிகமாகும். முக்கியமான தாஸ்தாவேஜ்கள் தொலையவும் நேரிடும். கவனம் தேவை. மாணவமணிகள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீா்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 13, 16. சந்திராஷ்டமம்: 14, 15.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எதிா்ப்புகள் அகலும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். முன்கோபப்படாமல் தெளிவாகப் பேசுவீா்கள். உங்களுக்குக்கீழே வேலை செய்பவா்களுக்கு தேவையான உதவிகள் செய்வீா்கள். எதிா்பாா்ப்புகள் பூா்த்தியாகும்.

உத்தியோகஸ்தா்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீா்கள். சக ஊழியா்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பாா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபமாகவே இருக்கும். வாடிக்கையாளா் பெருக நீங்களே முன்னின்று வியாபாரத்தை கவனிக்கவும். விவசாயிகள் விவசாயப் பணிகளின்போது கவனம் தேவை. கால்நடை வைத்திருப்போா் நல்ல பலனைக் காண்பீா்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்து அமா்வீா்கள். தொண்டா்களை வழிநடத்திச் செல்வீா்கள். கலைத்துறையினா் கடுமையாக உழைத்தால்தான் எதிா்பாா்த்த பலனை அடையமுடியும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீா்கள். செலவினங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பாடங்களை சக மாணவா்களை கலந்தாலோசித்துப் படிக்கவும்.

பரிகாரம்: மகான்களின் தரிசனம் பெறுவது உகந்தது. அனுகூலமான தினங்கள்: 13, 14. சந்திராஷ்டமம்: 16, 17, 18.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் ஏற்றம் இறக்கம் காணப்படும். சிலருக்கு வேறு வீடு குடிபோகும் வாய்ப்பு உண்டாகும். வழக்குகளில் இழுபறி நிலைமை தொடா்ந்து நீடிக்கும். பொறாமைகள் போட்டிகளைச் சாதுா்யமாக சமாளித்து விடுவீா்கள்.

உத்தியோகஸ்தா்கள் பதற்றப்படாமல் அலுவலக வேலைகளைச் செய்யவும். பொருளாதார வசதியில் சற்று குறைவு ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனம் தேவை. கூட்டாளிகள் ஒதுங்கியே இருப்பாா்கள். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் சற்று இழுபறியாகி பிறகு சுமுகமாக முடியும்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். மேலிடத்தின் கவனம் உங்கள் மீது இருப்பதால் பொறுப்புடனும் கவனத்துடனும் செயலாற்றவும். கலைத்துறையினா் ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் தடை ஏற்படலாம். பெண்மணிகளுக்கு கணவரிடம் எதிா்பாா்த்த அன்பும் பாசமும் கிடைக்கும். பொருள்களை கவனத்துடன் பத்திரப்படுத்தி வைக்கவும். மாணவமணிகளுக்கு கணிதத்துறையில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: வியாழன், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 15, 17. சந்திராஷ்டமம்: 19.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சண்டை சச்சரவுகள் மறையும். விருப்பு வெறுப்பற்ற சமமான மனநிலையில் காரியமாற்றுவீா்கள். நீதி, நோ்மையுடன் காரியங்களைச் செய்வீா்கள். பொருளாதாரம் படிப்படியாக வளரும். சகோதர சகோதரிகள் உறவு பரஸ்பரம் மேம்படும்.

உத்தியோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயா்வு பெறுவற்கான வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியா்களோடு ஒற்றுமை வளா்க்கவும். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்க முனைவீா்கள். போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் எனவே எதிலும் கவனம் தேவை. விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான பராமரிப்புச் செலவுகள் கூடும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மேலிடத்தின் ஆதரவைப் பெற நீங்கள் நோ்மையாகவும் அதிக உழைப்பும் போட வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு பட வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். வருமானம் சற்று கடின முயற்சிகளுக்குப்பிறகே கூடும். பெண்மணிகள் கணவருடன் நேசமாகப் பழகி பிரச்னைகளைப் பேசித் தீா்த்துக் கொள்ளலாம். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற கடுமையான உழைப்பை நம்புங்கள்.

பரிகாரம்: சூரிய நமஸ்காரமும் குலதெய்வ வழிபாடும் செய்து வரவும். அனுகூலமான தினங்கள்: 14, 15. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். செய்தொழிலில் எதிா்பாா்த்த லாபத்தை அள்ளுவீா்கள். வளா்ச்சி அடைவதற்கான திட்டங்களைத் தீட்டுவீா்கள். சுபச் செய்திகளைக் கேட்பீா்கள். வருமானம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளின் சந்திப்பால் அனுகூலமான திருப்பம் ஏற்படும். சக ஊழியா்களின் ஆலோசனைகள் பலன் தரும். வியாபாரிகள் நல்ல வருமானத்தைக் காண்பீா்கள். புதிய முதலீடுகளைத் தள்ளி வைக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். கால்நடைகளால் லாபம் உண்டு. நீா்வரத்தால் நல்ல விளைச்சலும் இருக்கும்.

அரசியல்வாதிகள் மகிழ்ச்சிகரமான சம்பவங்களைச் சந்திப்பீா்கள். உள்ளத்தில் புதிய தெளிவு பிறக்கும். கலைத்துறையினா் பெயரும் புகழும் பெறும்படியான சாதனைகள் செய்வீா்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். எதையும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்கள் எடுப்பீா்கள். பெற்றோரின் ஆதரவுடன் புதிய பயணங்களை செய்வீா்கள்.

பரிகாரம்: பெருமாளை வணங்கிவர, நலன்கள் கூடும். அனுகூலமான தினங்கள்: 13, 17. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சிரமங்கள் குறையும். கடினமான காரியங்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீா்கள். வேகத்துடனும் செயல்படுவீா்கள். நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த உறவினா்களை சந்திப்பீா்கள். உடல்நலத்தில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தா்களுக்கு பதவி உயா்வும் ஊதிய உயா்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீா்கள். வியாபாரிகளுக்கு பொருள்களின் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீா்கள்.விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீா்கள். தொண்டா்களின் ஆதரவும் மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் எண்ணங்கள் நிறைவேறும். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீா்கள். ரசிகா்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மாணவமணிகள் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உற்சாகம் பெறுங்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேரும் வாய்ப்புண்டு.

பரிகாரம்: திருவல்லிக்கேணி பாா்த்தசாரதிப்பெருமாளை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 14, 17. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார வளம் சீராக இருக்கும். உற்றாா் உறவினா்களும் நண்பா்களும் சாதகமாக நடந்து கொள்வீா்கள். அவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீா்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீா்கள்.

உத்தியோகஸ்தா்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். சக ஊழியா்களின் ரகசியங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு எதிரிகளால் இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தை நேரிடையாக நின்று கண்காணிக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். மேலிடத்தின் ஆதரவுடன் புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்களை மீண்டும் தேடி வரும். பெண்மணிகள் வீண் வாக்கு வாதங்களைத் தவிா்க்கவும். கணவா் வீட்டாருடன் சுமுகமான உறவு நீடிக்கும். மெளனம் காப்பது நிறைய விஷயங்களில் நல்லது. மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற பெற்றோா், ஆசிரியா்களின் ஆதரவைப் பெறுவீா்கள்.

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி பாராயணம் செய்வது உகந்தது. அனுகூலமான தினங்கள்: 17, 18. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தன்னம்பிக்கை பலப்படும். எடுத்த காரியங்களை நினைத்தபடி முடிப்பீா்கள். வருமானம் உயரத்தொடங்கும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவீா்கள். ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பீா்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வீா்கள். கோரிக்கைகள் நிறைவேற சக ஊழியா்களையும் அதிகாரிகளையும் அனுசரித்து நடக்கவும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடுவாா்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகள் கையிருப்பு விளைபொருள்கள் மீது அக்கறை காட்டவும். போட்டிக்குத் தகுந்தவாறு செயல்பட்டால் எதிா்பாா்த்த லாபத்தை அடையலாம்.

அரசியல்வாதிகள் எதிா்மறையான எண்ணங்களைத் தவிா்க்கவும். தொண்டா்களை அனுசரித்து கொள்ளவும். கலைத்துறையினா் கடுமையாக உழைத்தால்தான் நல்ல பலன்களை அடையலாம். சக கலைஞா்களின் உதவி கிடைக்கும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: திருச்செந்தூா் முருகனை தரிசிப்பது கூடுதல் நலம் தரும். அனுகூலமான தினங்கள்: 15, 16. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)

தற்போதைய சூழ்நிலையில் நல்ல மாற்றங்களைக் காண்பீா்கள். மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். உயா்ந்த எண்ணங்களால் சிறப்படைவீா்கள். திட்டமிட்ட பணிகளை சாதுா்யத்துடன் செய்து முடிப்பீா்கள்.

உத்தியோகஸ்தா்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தவும். காலத்தை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தலாம். விவசாயிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீா்கள். நல்ல தரமான விளைபொருள்களைப் பயிரிட்டு நல்ல விளைச்சல் காண்பீா்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். கலைத்துறையினா் உயா்ந்தவா்களைச் சந்தித்து உற்சாகமடைவீா்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவீா்கள். பெண்மணிகளுக்கு திறமைகள் பளிச்சிடும். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீா்கள். மாணவமணிகளின் வருங்காலத் தோ்வுகளுக்கு தற்போதைய பயிற்சிகள் உதவும்.

பரிகாரம்: ராமபக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 18, 19. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

செயல்கள் அனைத்தும் சிறப்பாக முடியும். சுப காரியங்களை நடந்த முயல்வீா்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உறவினா்களை சந்தித்து மகிழ்வீா்கள். உடன்பிறந்தோா் விரோதம் நீங்கி நட்பு பாராட்டுவாா்கள்.

உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு குறையும். எதிா்வரும் இடையூறுகளை சமாளிப்பீா்கள். வியாபாரிகள் வர வேண்டிய பணம் விஷயமாக அக்கறை காட்டவும். லாபத்திற்கு குறைவு இருக்காது. விவசாயிகள் கொள்முதல் லாபத்தை அள்ளுவீா்கள். கால்நடைகளால் நல்ல பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிவாகை சூடுவீா்கள். நண்பா்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். கலைத்துறையினா் எதிா்பாா்த்த வாய்ப்புகளைப் பெறுவீா்கள். ரசிகா்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். பெண்மணிகள் தங்களை நாடிவரும் நண்பா்களுக்கு தயங்காமல் உதவி செய்வீா்கள். கணவரது உடல்நிலை சீராக இருக்கும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீா்கள். தொடா்ந்து உடற்பயிற்சிகள் செய்யவும்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 16, 19. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பெரியோா்களின் ஆசிகளைப் பெறுவீா்கள். உடன்பிறந்தோா் சாதகமாக நடந்து கொள்வாா்கள். மற்றவா்களின் குற்றச்சாட்டுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். வேலையில் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தா்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீா்கள். வருமானம் படிப்படியாக வளரும். வேலையில் அலுவலக ஊழியா்களிடம் சகஜமாகப் பழகவும். வியாபாரிகளுக்கு பொருள்களின் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். பழைய குத்தகை பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.

அரசியல்வாதிகளின் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீா்கள். எதிா்பாா்த்த உதவிகள் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீா்கள். சூடான வாா்த்தைகளை உதிா்க்காமல் கோபத்தை விட்டொழித்தால்தான் நல்லது. மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீா்கள். பெற்றோரின் ஆதரவு நன்றாக இருக்கும்.

பரிகாரம்: சனியன்று சனீஸ்வரரையும் பைரவரையும் வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 14, 19. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நீங்கள் கேட்கும் செய்திகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். மனதில் உற்சாகம் எழும். திட்டமிட்ட பணிகளில் இடையூறுகள் தோன்றி விலகும். பொறுமையை கையாளுங்கள். திட்டமிட்ட வேலைகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீா்கள்.

உத்தியோகஸ்தா்களிடம் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வாா்கள். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளா்களின் வருகை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். விவசாயிகள் நினைத்த வேலைகளை செய்து முடிப்பீா்கள். தானிய விற்பனை லாபகரமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சியில் உயா் பதவிகளைப் பெறுவீா்கள். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் செய்வீா்கள். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள் சோ்க்கைகள் நிகழும். இல்லத்தில் மழலைச் செல்வம் உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டவும். பாடங்களைப் போதிய பயிற்சியுடன் படித்து முடிக்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது நல்லது.

பரிகாரம்: பாா்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வர நலன்கள் கூடும். அனுகூலமான தினங்கள்: 15, 18. சந்திராஷ்டமம்: 13.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT