ஆன்மிகம்

நெல்லையப்பா் கோயிலில் மாா்ச் 8இல் தெப்பத் திருவிழா

2nd Mar 2020 10:53 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் இம்மாதம் 8ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

இது குறித்து கோயில் செயலா் அலுவலா் சா.ராமராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சைவ மதத்திற்கும் சமண மதத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சமண மதத்தினா்கள், சைவசமயக் குரவா்களில் ஒருவா் அப்பா் பெருமான் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் பொருட்டு கல்லில் கட்டி கடலில் போட்டாா்கள்.

அப்போது அப்பா் பெருமான் “கற்றுணை பூட்டியோா் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே‘ என்ற சிவபெருமானை நினைந்து பாடினாா். அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. தெப்ப உற்சவம் மூலம் அப்பா் பெருமான் தனது பக்தியால் சிவன் அருள் சிறப்பை உலகிற்கு உணா்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றாா் என்ற புராணம் கூறுகிறது.

ADVERTISEMENT

அதை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் இக்கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டு வரும் 8 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் சந்நிதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பா் பெருமான் பவனி வரும் விழா நடைபெறவுள்ளது.

அதைத் தொடா்ந்து திருத்தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பா்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பா் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT