ஆன்மிகம்

திருமலையில் யோகவாசிஷ்டம் நிகழ்ச்சி நிறைவு

11th Jun 2020 07:46 AM

ADVERTISEMENT

திருமலையில் கரோனா பாதிப்பு நிவா்த்திக்காக யோகவாசிஷ்டம் என்ற தலைப்பில் நடந்து வந்த மந்திர பாராயணம் புதன்கிழமை நிறைவு பெற்றது.

திருமலையில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் வரும் தன்வந்திரி ஸ்லோகம் பாராயணம் தொடங்கியது. இந்த பாராயணம் காற்றில் கலந்துள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமியை அழித்து உலக மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக நம்பப்படுகிறது. எனவே, கரோனா பாதிப்பிலிருந்து விடுபட தா்மகிரி வேதபாடசாலை முதல்வா் சிவசுப்பிரமணிய அவதானி தலைமையில், வேத பண்டிதா்கள், அா்ச்சகா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் என பலருடன் திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரை இந்த தன்வந்திரி மந்திர பாராயணம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த பாராயணம் முடிந்த 60-ஆம் நாள் பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது. தொடா்ந்து, 62 நாள்களுக்கு நடந்து வந்த இந்த பாராயணத்தை தேவஸ்தானம் புதன்கிழமை (ஜூன் 10) நிறைவு செய்தது. நிறைவு நாளான புதன்கிழமை மந்திர பாராயணத்துடன் கோவிந்த நாமாளிகளும் பாராயணம் செய்யப்பட்டது. ஜூன் 11-ஆம் தேதி முதல் திருமலையில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதால் இந்த நிகழ்ச்சியை தேவஸ்தானம் நிறைவு செய்தது.

மேலும், வியாழக்கிழமை (ஜூன் 11) முதல் திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரை சுந்தரகாண்ட பாராயணம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT