ஆன்மிகம்

பந்தளம் அரண்மனையிலிருந்து புறப்பட்டது திருவாரணப்பெட்டி: நாளை மகரஜோதி பெருவிழா

14th Jan 2020 01:44 PM

ADVERTISEMENT

 

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. 

கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மண்டல பூஜை நிறைவடைந்ததையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மகரவிளக்கு பூஜைக்காக ஒவ்வொரு ஆண்டும் பந்தளத்திலிருந்து ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று பகல் 1.00 மணிக்கு பந்தளம் அரண்மனையிலிருந்த திருவாபரண பவனி புறப்பட்டது. பவனி, நாளை மாலை 6.25-க்கு சன்னிதானம் வந்து சேருகிறது. 

ADVERTISEMENT

சபரிமலையில் நாளை மாலை நடைபெறும் மகர விளக்கு பெருவிழாவில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும். அப்போது, பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆபரணங்கள் அனைத்தும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

மகரவிளக்கு பெருவிழாவில் கலந்துக்கொள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் சன்னிதானம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT