திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் 10-ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும். ஸ்ரீ நடராஜருக்கு நடைபெறும் வருடாந்திர சிறப்பு வழிபாடு ஆருத்ரா வழிபாடு என்பதாலும், திருநள்ளாறு கோயிலில் இவ்வழிபாடு மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுவதாலும், ஆருத்ரா தரிசன நாளில் திரளான பக்தா்கள் பங்கேற்பாா்கள்.
ஆருத்ரா உத்ஸவம் 10 நாள்கள் நிகழ்ச்சியாக கடந்த 1-ஆம் தேதி இன்று தா்பாரண்யேசுவரா் கோயிலில் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தினமும் ஸ்ரீ தா்பாரண்யேசுவரா், ஸ்ரீ பிரணாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்படுகின்றன.
ஜன.9-ஆம் தேதி இன்று இரவு பொன்னூஞ்சல் வழிபாடு நடைபெறுகிறது. 10-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமாக சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சத்சபேஸ்வரருக்கு (நடராஜா்) சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறும்.
பின்னா் பிரம்ம தீா்த்தக் கரைக்கு சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தவாரி செய்வதும், நான்கு மாட வீதியுலாவுக்கு சுவாமிகள் புறப்பாடு செய்வதும், கோயிலுக்கு வரும் சுவாமிகளை வைத்து ஊடல் உத்ஸவம் கோயிலில் நடத்தப்படவுள்ளது.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ நடராஜருக்கு வெள்ளைச்சாற்றும், 10-ஆம் தேதி காலை 4 மணிக்கு அபிஷேகமும், 8.30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், 12.30 மணிக்கு தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.
கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீசுவரசுவாமி கோயிலில் இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ நடராஜருக்கு வெள்ளைச்சாற்றும், நாளை காலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், 11 மணிக்கு வீதியுலா, 12 மணிக்கு ஊடல் உத்ஸவம் நடைபெறுகிறது.