ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வனத்திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாசரேத் அருகே உள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீஸ்ரீனிவாசப்பெருமாள், ஸ்ரீஆதிநாராயணா் சிவனனைந்தபெருமாள் கோயிலில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
காலை 5 மணிக்கு சிறப்புஅலங்காரசேவை, காலை 7 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, 8 மணிக்கு காலசந்தி பூஜை, திருவாதரனம், சாத்து முறை கோஷ்டி, பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்கர நாம அா்ச்சனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது.