ஆன்மிகம்

நடராஜருக்கு தங்க வில்வ சிவபுராண திருவாபரணம் சமர்ப்பணம்

1st Jan 2020 05:38 PM |  -ஜி.சுந்தரராஜன் 

ADVERTISEMENT

 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்னை சிவலோக திருமடத்தின் சார்பில் தங்க வில்வ சிவபுராண திருவாபரணம் வருகிற 2020 ஜன.1-ம் தேதி வழங்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சென்னை சிவலோக திருமடம் சார்பில் வருகிற டிச.31-ம் தேதி இரவு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சென்னை சிவலோக திருமடம் சார்பில். 2020 ஜன.1-ம் தேதி புதன்கிழமை மாலை சிதம்பரம் மெளன மடத்திலிருந்து மெளன மட குருமகா சந்நிதானம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமையில் தங்க வில்வ சிவபுராண திருவாபரணம் புறப்பட்டு திருக்கயிலா வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது.

வீதிஉலாவை த.செல்வரத்தின தீட்சிதர் நந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாலை மெளன மட குருமகா சந்நிதானம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளாசியுடன், சென்னை சிவலோக திருமடத்தின் சார்பில் சிதம்பர ரகசியத்தில் பொருத்த தங்கத்திலான வில்வத்தில் சிவபுராணம் பதித்த திருவாபரணம் நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னதாக 31-ம் தேதி தங்க வில்வ சிவபுராண திருவாபரணம், மாணிக்கவாசகர் சொல்ல நடராஜர் திருவாசகம் எழுதிய திருப்பாற்கடல் ஆத்மநாதர் கோவிலில் வைத்து யாகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT