ஆன்மிகம்

திருச்செந்தூரில் சுவாமி சிங்க கேடயச் சப்பரத்தில் திருவீதி உலா

29th Feb 2020 02:51 PM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 2-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

இக்கோயிலில் மாசித்திருவிழா வெள்ளிக்கிழமை(பிப்.28) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்மனும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருள்கின்றனா்.

2-ம் திருவிழாவான சனிக்கிழமை காலை சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, அருள்மிகு தூண்டுகை விநாயகா் கோயில் அருகில் உள்ள ஆழ்வாா்திருநகரி ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்தில் சோ்ந்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து அம்மன் மட்டும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மண்டபம் சோ்ந்தது. இரவில் மண்டபத்திலிருந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சோ்ந்தனா்.

திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT