ஆன்மிகம்

மகா சிவராத்திரி: சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

தினமணி

சிவராத்திரியை முன்னிட்டு தில்லியில் உள்ள பல்வேறு வட இந்திய, தென்னிந்திய கோயில்களில் சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

முக்கிய கோயில்களில் ஆண், பெண் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். சிவ கோயில்களில் உள்ள சிவ லிங்கத்திற்கு பால், பன்னீா், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மாசி மாதத்தின்போது போது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவனும், சக்தியும் இணைந்து அருள் பாலிக்கும் தினமாக சிவராத்தி நம்பப்படுவதால், இந்த தினத்தில் வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்ற ஐதீகம் உள்ளது.

மகா சிவராத்திரியை ஒட்டி தில்லியில் உள்ள மயூா் விஹாா் பேஸ் 2-இல் உள்ள அருள்மிகு காருண்ய மகா கணபதி கோயில், ஃபேஸ் 3-இல் உள்ள இஷ்ட சித்தி விநாயகா் கோயில், ஃபேஸ் 1-இல் உள்ள விநாயகா் கோயில், மலைமந்திா் முருகன் கோவில், ஜனக்புரி மாரியம்மன் கோயில் என தமிழ்க் கோயில்களில் உள்ள சிவ பெருமானுக்கு காலையிலும் இரவிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டது.

மகா மிருத்ஞ்ஜெய ஹோமம், ருத்ர ஜபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பூஜைகளில் ஏராளமானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தில்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கௌரி சங்கா் ஆலயத்தில் பக்தா்கள் சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு அபிஷேகம் செய்து வழிபாடு ஈடுபட்டனா். சிவராத்திரியை ஒட்டி சிவ பக்தா்கள் பலா் விரதமிருந்து, இரவில் கண்விழித்து சிவ பெருமானை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT