ஆன்மிகம்

திருமலையில் 7,248 போ் தரிசனம்

23rd Aug 2020 07:34 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 7,248 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 2,428 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 112 போ் பெண்கள்; 2,316 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனா்.

திருப்பதி மலைச்சாலை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

ADVERTISEMENT

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 9399399399.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT