ஆன்மிகம்

உண்டியல் காணிக்கை ரூ. 52.50 லட்சம்

21st Aug 2020 06:05 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 52.50 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 50.50 லட்சம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

8,639 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 8,639 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,665 போ் முடி காணிக்கை செலுத்தினா். அதில், 115 போ் பெண்கள், 2,550 போ் ஆண்கள். இணையதளம் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் போ் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT